பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓதுதல் :

CC

2. வள்ளலார் கண்ட ஓதாக் கல்வி

“இளமையில் கல்” என்றார் ஔவையார்.,

“இளமைக் கல்வி சிலையில் (கல்லில்) எழுத்து”

என்பது பழமொழி.

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”

என்பது உலக நீதி.

66

ஓதுவது ஒழியேல்” என்பதும் ஒளவைமொழி.

“நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத்தீரும்" என்பதும் பழமொழி. தீரும் என்பது மறந்து விடும் என்பதாம்.

“ஓதி மறப்போன் ஓட்டைக் குடமே” என்பது அன்பும் அறிவும்.

ஓதுதல் வேண்டும்; தொடர்ந்து ஓதுதல் வேண்டும்;

ஒதுவது ஒழிந்தால், ஓதியதும் ஒழியும் -என்பவற்றை விளக்குவன இவை. ஓதிய பேதை :

ஓதி உணர்கிறான் ஒருவன்; ஓதியதைத் தவறாமல் மனத்துக் கொண்டிருக்கிறான்; கொண்டதைப் பிறர் உணர எடுத்துரைக்க வல்லனாகவும் இருக்கிறான்; ஆனால் அவன், தான் ஓதியதற்குத் தக்கவாறு அடங்கி இராமல் அடங்கானாகக் கண்டவாறு திரிகிறான்; அவன் பேதை அல்லன்; பேதைக்கும் பேதை; என்பது வள்ளுவம். அது,

'ஓதிஉணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல்' என்பது.

ஒதுவார் :

இராசராசன் காலத்தில் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிக்க (தேவாரம், திருவாசகம்,

திருவிசைப்பா