பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிவுத் திறம் :

வள்ளலார் கண்ட சாகாக்கலை

171

ஓரிருமுறை கேட்ட அளவில் மனமாம் ஏட்டில் அழியாப் பதிவாக்கிக் கொள்ளும் ஆற்றலாளர் தமிழ்மண்ணில் வாழ்ந்தனர். அவருள் ஒருவர் அந்தகக் கவிவீரராகவர். அவர் தம்மை,

ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்தே எழுதிப் படித்த விரகன்

இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன்

என்கிறார்.கட்பொறியின் ஒளி இழந்த அவர், உள்ளொளி வல்லாராகத் திகழ்ந்தமை போலவே திகழ்ந்தவர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர். அவர் ஒரு பாடலை ஒரு முறை கேட்ட அளவில் மனத்தகத்தே வரப்படுத்திக் கொள்ளும் திறத்தினர்.

அவர், ஒரு முறை கேட்டுஒப்பிப்பார் (ஏக சந்தக்கிரகி) எனப்பட்டார். அவர்க்குக் கையேடு படித்தவர் இருமுறை கேட்டு ஒப்பிப்பார் எனத் திகழ்ந்தார். இவ்வாறு, பல்கால் படியாமல், கேளாமல் ஓரிருகால் கேட்டு மனத்தே வரப்படுத்திக் கொள்ள வல்லார், உலகளாவிய பார்வையில் பலராவர். தமிழ் மண்ணில் வாழ்ந்த ஞானசம்பந்தர், மெய் கண்டார், குமரகுருபரர் என்பாரைச் சுட்டலாம். அத்தகும் உள்வாங்கு திறம் கொண்டவர் வள்ளலாராவர் என்க.

ஓதாக் கல்வி :

காண

ஓதாக் கல்வி திருக்குறளில் உள்ளது என்கிறார் வள்ளலார். அதனை நாம் கண்டு கொண்டால் தெளிவு பிறக்கும். எளிமையில் யலாவாறு உரைமயக்கம் செய்து கொண்டிருத்தலை நாம் கண்டு கொண்டாலன்றித் தெளிவு ஏற்படும் வாய்ப்பு இல்லை. திருக்குறளில் ஓதாக் கல்வி பற்றி உரைக்கும் பாடல் எதுவென வள்ளலார் கூறினார் அல்லர்! சாகாக்கலை திருக்குறள் முதல் அதிகாரத்தில் உள்ளமையைச் சுட்டும் வள்ளலார், இவ்வோதாக் கல்வியுள்ள அதிகாரத்தைத் தானும் சுட்டிக் காட்டினார் அல்லர்! நாம் முயன்று வள்ளுவப்பார்வையே பார்வை எனப் பார்த்தால் அக்குறள் தலைகாட்டுகின்றது. அது,

66

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து”

என்பது.