பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

ஒருமையின் வடிவாகவே நின்ற வள்ளலார் கற்ற கல்வி ஒருமைக் கல்வியே என்று கொள்ளுதல் பொருந்துவதாம்! வேலு முதலியார்க்கு எழுதிய பாடலொன்றில்.

"ஒருமையிலா மற்றவர் போல் எனை நினைத்தல் வேண்டா”

என்கிறார்! வள்ளலார் தாமே தம்மைச் சுட்டுவது அல்லவோ இது! ஆற்றங்கரை, குளத்தங்கரை அடுத்துள்ள சிற்றூர் மகளிர் நீரைக் குடங்களில் எடுத்துத், தலையில் ஒன்றும் இடையில் ஒன்றுமாய் வைத்து நடையிட்டு, வாய்பேச கைவீச வயல் வரப்புகளில் நடையிட்டு வருதலை ன்றும் காணலாம்! எத்தனை செயல்கள் ஒருமைப்பாட்டால் இடரின்றி இயல்பாக நிகழ்கின்றன!

ஐந்தவித்தல் :

அருகர் பெருமானுக்கு ஒரு பெருமையைத் தமிழுலகம் தந்தது. அது, புலன் ஐந்தும் வென்றான் என்பது. புத்தர் பெருமான் நிலையும் அதுவே, இவர்கள் ஐந்தவித்த அறவோர் ஆயவர். ஐந்து,மெய் வாய் கண் மூக்கு செவி! அவித்தல் பக்குவப்படுத்தல். இதனைத் திருவள்ளுவர்,

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம்” என்றும், “ஐந்தவித்தான் ஆற்றல்"

""

என்றும் கூறினார். திருவள்ளுவர் உவமை வகையால்,

“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து”

-என்றார்.எதனால் ஐந்தடக்கிக் காப்பது எனின்,

“உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

-என்றார்.

மனச் செருக்கு, மனச் சுழற்சி, மன நிலையாமை என்பவற்றைக் கருதி மனம் எனும் மாடு, மனக்குதிரை, மனக் குரங்கு என்பாரும் பிறவாறு கூறுவாரும் உளர்.

மாட்டிலும், குதிரையிலும், மந்தியார் ஆட்டமே பெரிதாம். அதனையும் அடக்கி வைக்கும் அழகோவியத்தைத் தீட்டிக் காட்டுகிறார் சீத்தலைச் சாத்தனார்.