பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“வெயில்நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலாட ரங்கின் மந்திகாண் பனகாண்'

என்பது அது.

""

177

ஒன்றில் முழுதுற ஈடுபடுங்கால் அதுவாகவே மாறிவிடுதல் மன இயற்கையாம்!

அதுவாதல் :

ஆழ்ந்த படிப்பின் போது ஆடும் மணியொடு ஆனை நடையிட்டுச் சென்றதும் தெரிவது இல்லை! ஆரவாரக் கொட்டு முழக்கும் புலப்படுவது இல்லை!

படிப்போ எழுத்தோ பணியோ பார்வையோ அதுவாகச் செய்யும் நிலையில் அவர் அதுவாகித் தம்மை மறந்தாராகிறார். அவர் அச்செயலாராக, அக்காட்சியாராக ஆவாரேயன்றிச் செயலற்றவர் ஆகமாட்டார். இதனைத்,

“தன்னை மறந்த லயம்” -என்பார் பரதியார்.

“செயல் மறந்து வாழ்த்துதும்”

-

என்பார் பேராசிரியர் சுந்தரனார்!

“எங்கெங்கே காணினும் அங்கங்கே நீயன்றோ"

-என்பார் தாயுமானார்.

கூனியாக நடித்த ஒருவனை நாடகத்தில் பார்த்த உணர்ச்சியாளன், அவன்மேல் தன் செருப்பைக் கழற்றி வீசினான் என்றால் என்ன பொருள்? அவன் நடித்தான் அல்லன்! கூனியாகவே மாறிவிட்டான் என்பதுதானே பொருள்!

இறந்தவனாக நடிக்க வேண்டிய காட்சி! காட்சி முடிந்தது! இறந்தானாக நடித்தவன் எழவே இல்லை! இறந்தே கிடந்தான்! அதுவாகிய நிலை அது! அந்நிலை ஒருமை நிலை! அந்நிலை யுற்றவர் ஒரோ ஒரு முறை படித்த கேட்ட எதனையும் தம் உள்வாங்கி என்றும் வைத்துக் கொள்ள வல்லார் என்பதாம்.

வரலாறு:

வள்ளலாரின் தமையனாராகிய சபாபதிப் பிள்ளை அக்காலக் கல்வி முறைப்படி திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி முதலிய நூல்களைத் தம் அருமைத் தம்பியார்க்கு