பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம் 34

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே"

இப்பாடல் பொருளாகிய குளிர்தரு முதலியவை கண்டு கொண்ட துய்ப்புப் பொருள்களே அல்லாமல் ஓதிவந்த பொருள்களா? இயற்கை கற்பிக்கும் பாடங்களை ஆழ எண்ணினால்,

"பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்;

பார்வை சரியாக இருந்தால்"

என்னும் உண்மை விளங்கும்!

சான்றாக வருவன காண்க.

ஒருவர்க்குத் தேவைப்படும் குறிக்கோள் வாழ்வை

உணர்த்தும் காட்சிகள் அவை;

இயற்கை உணர்த்தும் வகை;

“எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும்; உயிர்க்கது தூண்டுகோல் போலாம்" ஒரு சிறு புல் :

இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்போடு சாருதல் காண்டி; அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்ஊண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ! என் தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே 'இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின், புள்ஆ எருது அயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்' எனத்தன் சிறுவரைப்