பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

சுரங்கம் மூழ்கிக் குளிப்பவர் நெஞ்சிலே சூழ்ந்து கல்லை உடைப்பவர் நெஞ்சிலே இரும்பைக் காய்ச்சி உருக்குவர் நெஞ்சிலே எழிலி யற்கை இறைமை இயங்குமே. சோலை வாழ வளர்ப்பவர் சிந்தையில் தூய பிள்ளை பெறுபவர் சிந்தையில் நூலும் சிற்பமும் யாப்பவர் சிந்தையில் நுண்ணி யற்கை இறைமை நுழையுமே.

விளைவு செய்யும் வினைஞ ருலகமே வீறி வேர்விட் டெழுந்து விரிந்திடின் இளமை ஞாலம் இயற்கை இறைமையின் இனிமை யாகி வளமை கொழிக்குமே. திருப்பணி

நகைக்கும் பூவை நறுக்கெனக் கிள்ளல் நடுங்கப் பச்சை மரத்தினைச் சாய்த்தல் செகத்தில் வீழாச் செழுங்கனி கொய்தல் சீவக் கோயில் சிதைப்பதே ஆகும்.

ஆடும் மஞ்ஞை அலற அடித்தல் அலகுக் கோழி கதறத் துணித்தல் பாடு மாங்குயில் பார்த்துச் சுடுதல் பரமன் கோயில் இடிப்பதே யாகும்.

வேள்வி என்றோ உயிர்க்கொலை செய்தல்? வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல்? கேள்வி இல்லை கிளர்ச்சியும் இல்லை, கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ?

நூல் : புதுமை வேட்டல்.

ஓதும் கல்வியால் வாராத வெல்லாம் இயற்கை வழங்கும் ஓதாக் கல்வி வழியாய் வரப் பெறுதலால்,

“செயற்கைப் பள்ளியில் சிந்தை இனிச் செலா"

என்று முடிவு செய்து,

13

14

15