பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

“செழுமை கண்டவர் தீமையில் விழுவரோ?'

197

என வேற்றுப் பொருள் வைப்பு அணியில் நிலைநாட்டுகிறார் திரு.வி.க.

வள்ளலார் விழைவு :

-

-

தாம் கொண்ட இயற்கை இறைமைக் கல்வியை ஓதாக் கல்வியை உள்கி உள்கி அறிந்த கல்வியை எல்லவரும் உறல் வேண்டும் என வள்ளலார் விழைந்தார்; வேண்டினார்; எனினும், உலகியல் பொதுமைக் கல்விமுறை அஃதன்று என்று அறிந்த வராய்,

(4

ஆபால விருத்தர் கல்வி கற்கும் வகையில் சாலை அமைத்தார்; உபயகலாநிதி தொழுவூர் வேலாயுதரைக் கற்பிக்கும் ஆசிரியப் பணிக்கு அமைத்தார். “சன்மார்க்க விவேக விருத்தி' என்னும் மாத இதழ் வெளிவர ஏற்பாடு செய்தார். இவை பற்றிய அறிக்கைகள் வெளியிட்டார்.

சன்மார்க்க விவேக விருத்தி

1867

சற்குருவே நம :

சன்மார்க்க விவேக விருத்தி

விளம்பரம்

அறிவுடைய நண்பர்க்கு அன்போடு வந்தனம் செய்து அறிவிக்கை. நண்பர்களே!

உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்தல் வேண்டும். அங்ஙன மறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனை யடைதற்குத் தக்க நன்முயற்சிக்கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தி யென்னும் பத்திரிகை யொன்று வழங்குவிக்கு நிமித்தம், இதனடி யில் தனித்தனி நம்மாலியன்ற அளவில் மாதந்தோறும் பொருளுதவி