பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

எவ்வுயிர்க்கும் பொதுவாம் பொதுமைப்பொது! அன்பில் பொதுமை! ஒளியில் ஒளியில் பொதுமை! வழியும் வழிபாடும் பொதுமை!

-

-

=

தேங்காய் - தட்டு - தாம்பாளம் - சூடம் - பற்றி (பத்தி) - பழம் பூ சுருள் - பணம் - நீறு - நெருப்பு - நெய் - நெருக்கடி - கூச்சல்-குழப்பம் இடி - மிதி கதை புனைவு சந்தடி வெடி - - வேட்டு - கொட்டு - முழக்கு கும்மாளம் என்பவற்றால் வாழ்வும் வருவாயும் கொண்டவர்களும் கொடுத்துக் கொடுத்தே பழகிப்போன கும்பலும்,

-

-

'வயங்குமணிப் பொது' வழிபாட்டை -ஒளிவழிபாட்டை 'ஒப்புமோ? ஆனால், அறிவுத் தெளிவால் ஒப்பிடுவார் திரள் திரளாகி, வடலூர்ப் பெருவெளியைக் கண்காணும் மக்கட் கடலூர் ஆக்கி வருவதைக் கண்டு, பொறுத்துக் கொண்டாவது இருக்குமா? இராது அல்லவோ!

பெளத்த சமயம், அருக சமயம், கிறித்தவ சமயம், இசுலாமிய சமயம் எனப்பிறபிற சமயங்கள் கிளர்ந்து தனித்தனிக் கொள்கை, கோயில், வழிபாடு எனக் கொண்டது பற்றிக் கொள்ளாத கவலை, வெறுப்பு எதிர்ப்பு ஆயவை, தம் சமயத்தில் இருந்து தனித்து மேடேறி அருட்பெருஞ்சோதி விளக்கமாகத் திகழ்தலைக் காணுமளவில் பொறுத்துக் கொள்ள முடியுமா?

கதிர்ஒளியைக் காணப்பொறுக்காமல் கதவைச் சாத்திக் கொண்டால் கதிர் ஒளி புறப்பட்டுப் பட்டொளி செய்யாமல் அமைந்துவிடுமா? அப்படி வெளிப்பட்டதே ஆறாம் திருமுறை.

அதில் என்னதான் அப்படிச் சொல்கிறார்?

தாம் கண்ணாரக் கண்ட சீர்கேடுகளைத் தமக்கே உயிர்ப்பாக இருந்த ஆன்ம நேயப் பெருக்கால் உலகம் உய்வதே குறித்து உரைக்கத் தொடங்கினார்.

உரைப்பதோ உண்மை! ஆனால், உண்மையின் கசப்பு ஒப்பி ஏற்கும் உயிரமுதாம் மருந்து ஆகிவிடுமோ, சடங்கு பொய் புரட்டு ஏமாற்று வஞ்சம் ஆயவையே வாழ்வாகிப் போனவர்க்கு?

சாதிமையிலும் சடங்கிலும் மூழ்கிக் கிடந்த திருத்தில்லைச் சிற்றம்பலம் வள்ளலார்க்கு, இயற்கை உண்மை வெளியாகவும் இயற்கை விளக்கமாகவும் இயற்கைத்தனி இன்பமாகவும் பேரொளிப் பிழம்பாகவும் தோன்றுகின்றது - இது சடங்கர்க்கு