பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள்

பொதுவெனக் கண்டிரங் காது

கொலை நெறி நின்றார் தமக்குளம் பயந்தேன்

எந்தைநான் கூறுவ தென்னே" (3477)

215

என்கிறார்.சன்மார்க்கத் தலைநெறி கொள்ளாது, கலை நெறியில் போகின்றார்; புலைநெறி விரும்புகின்றனர். கொலை நெறி நிற்கின்றனர் என நைகின்றார். கலையரையும் புலையரையும் கொலையரையும் வாட்டாவா இன்னவை?

"பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்ற பிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும் இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார்.

(3677)

“பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர்'

(3696)

“கூறுகின்ற சமயமெலாம் மதங்களெல்லாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்”.

(3766)

“வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும்”.

(3767)

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக'

(3768)

66

'சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்"

(4075)

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளர்ஆகிய உலகியல் நடத்தல்வேண்டும்"

(4086)

இச்சாதி சமயவிதற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும். (4086)