பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரம்அன் றெனவே" (5805) இவையெல்லாம் திருவருட்பாவில் இடம் பெற்றவை. இவற்றின் திரட்டு என்ன?

இறையின் பெயரால் புலை கொலை ஆகா புலை கொலை புரிவோர் புறவினத்தார் இவை தவிர்ந்தோர் உறவினத்தார்

சாதி சமய மத நெறி, பொய்.

சாதி சமய மத வெறி, சூது.

பல் சமய மத நெறி பிள்ளை விளையாட்டு. பல் சமய மத நெறி பேய்த்தனம்.

பல் சமய மத நெறி பாவம்.

பல் சமய மத நெறி பயனற்றது. பல் சமய மத நெறி சழக்கு. சமயத் தெய்வம் துரும்பு.

நால்வருணம் ஆசிரமம் பிள்ளைவிளையாட்டு. சதுமறை ஆகம சாத்திரம் சந்தைப்படிப்பு. சமயக் கூட்டம் கொள்கைக் கூட்டம்.

சாத்திரம் குப்பை.

கலையுரைத்த கற்பனை கண்மூடித்தனம். நாத்திக நாக்க முடைநாக்கு.

சமயப் பெயரால் சண்டைபோர் கூடா.

சமயப் பெயரால் தருக்கமிடுதல் வேண்டா.

ஒரே இறை என்பதறியார், யானைகண்ட குருடர்.

அருட் பெருஞ்சோதியே இறை.

சன்மார்க்கமே மார்க்கம்.

சன்மார்க்க மாவது அருள்நெறி.

உலகவர் ஒருமையுளராகக் கடனாற்றல், சன்மார்க்கப் பணி.

சாதி, சமயம், சாத்திரம், கலைக்கற்பனை, தருக்கம், நாத்திகம் வை தீமையானவையா? அருள்நெறிக்குக் கேடானவையா? இவற்றை எண்ணுவோம்.

சாதி: சாதி என்பது மனித இனம் சார்ந்ததாக நம் முன்னோர்கள் கருதினர் அல்லர். பறவைச் சாதி, விலங்கின் சாதி, மீனின் சாதி என்றே கண்டனர்.