பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

229

ஒரு சீவனைக் கொன்று மற்றொரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுவது சீவகாருணிய ஒழுக்கம் ஆகாது.

மரம், புல், நெல் முதலியவைகளின் வித்து, காய், தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணியத்திற்கு விரோதமன்று. மாமிச ஆகாரம் துஷ்ட மிருகங்களுக்குப் பரம்பரை ஆகாரமே ஒழிய, நியதி ஆகாரம் அன்று.

சீவகாருணியம் என்கிற மோட்ச வீட்டுத் திறவுகோலைச் சம்பாதித்துக் கொண்டவர்கள், நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

சீவகாருணியம் இல்லாது செய்யப்படுகிற ஞானம், யோகம், தவம், விரதம், செபம், தியானம் முதலியவைகள் எல்லாம் பயனற்றவை.

சீவகாருணிய ஒழுக்கமுடையவர்கள் எந்தச் சாதியார் ஆயினும், எந்தச் செய்கை உடையவர் ஆயினும் யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்.

சன்மார்க்க விண்ணப்பங்கள் : சத்திய ஞான சபையைக் குறித்து ஏற்பட்டனவாகும்.

உண்மைக் கடவுள் ஒருவரே.

எங்கும் பூரணராய் விளங்குபவர்.

உண்மை அன்பால் கருத்தில் கருதி, வழிபாடு செய்தால் அவர் அருள் கிட்டும்.

சன்மார்க்கத்திற்குச் சமயங்கள் மதங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆகாரம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் முக்கியமான தடை. ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம்.

-

என்பவற்றை விரித்துக் கூறுகின்றன அவை.

அடிகளார் எழுதிய திருமுகங்களிலும் சன்மார்க்கம் விளக்கம் பெறுகிறது. தம் அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்களில், "தீர்க்காயுளும் சகல சம்பத்தும் உண்டாவனவாக, தமது சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்" என்றும்

தங்கள் சேம சரித்திரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்றும் மனம் அவலங்கொள்ளுகின்றது என்றும்,