பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம் 34 ஓ

"பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றம் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும்" என்றும், இந்தப் பாடல்கள் பங்கியில் அனுப்பி என்னிடம் சேருகின்ற பரியந்தம் நான் ஒருவேளை போசனம்தான் செய்வேன் என்று எழுதியதைப் பார்த்த பின்பு, நான் சாப்பிடுகிற சாதம் உடம்பில் பொருந்தவில்லை. பட்டினி கிடந்தவனைப் போல இருக்கிறேன், "ஆதலால் என்னை நிம்மதியுள்ளவனாக்க எண்ணங்கொண்டு ஒருவேளை போசனம் கொள்ளுகிற நிபந்தனை நீக்கி உடனே தபாலில் எனக்குத் தெரிவித்தால் அல்லது நான் சலிப்பைத் தவிரேன். ஒருவேளை போசனம் உள்ளவனாகவே-யிருப்பேன். இது சத்தியம். என்மேல் ஆணை என்றும்.

'தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வரவேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல் களில் மித போசனம் மிதபோகம்... நான் தம்முடைய தேகத்திற்கு விசேஷம் திடம் உண்டாகத் தக்க அவுஷதம் கொண்டு வருவேன்" என்றும்,

"நான்புசித்து வருகின்ற கிரகத்தில் யோக்கியராகவும் தலைவராவும் இருந்த ரெட்டியார் நாளது மாதம் 20 ஆம் தேதி பதவியடைந்தார். ஆதலால் உடனே வருவது ஓர்வகை நிந்தைக் கிடமாக இருக்கிறது” என்றும்,

"தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை ஒருவன் கட் பார்வை போன்றொழுகல் வேண்டும் என்றும் பிரார்த்திக் கிறேன். அன்றி உணவுறக்க முதலியவற்றால் உடம்பை மெல்லென நடத்தல் வேண்டும் இஃதென் வேண்டுகோள்" என்றும்,

-

"ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி ஏழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த ஓர் பேருழைப்பு ஓர் அசாக்ரதையால் தன்மை கெடப் பெற்றது. இங்ஙனம் பெறினும் நம்பெருமான் திருவுளக் குறிப்பு அங்ஙனம் இருந்ததென்று கருதி அமைதி பெற்றாமாயினும் பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும் போதெல்லாம் ஒரு சிறிது உளம் புடை பெயர்கின்றாம்" என்றும்,

"அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடிவர பிரயாணப்படுவார்கள் ஆரவாரப் பிரயாணமாக முடியும்"

என்றும்