பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் 349

"எனக்கு நிம்மதி இல்லாமல் தங்களிடம் வந்தால் தங்களுக்கு எப்படி நிம்மதி வரும்?

"யாவர்க்கும் மனது விகற்ப

மாகாதபடிக்கும் தயவு

வேறுபடாத படிக்கும் தங்கள் கருத்தின்படி நடத்தலாம்"

இவை புதுவை வேலு முதலியார்க்கு எழுதிய திருமுகங்களில் (6) இருந்து எடுக்கப்பட்டவை.

வள்ளலார் கொண்ட பொதுமை அறக் கோட்பாடும் நடைப்படுத்தமும் எத்தகு விளைவை உண்டாக்கிற்று என்பது எண்ணிப்பார்க்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றும் இல்லா அத்தூய வாழ்வு வடலூர்க் குடிகள் சுவாமிகளுக்குச் சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம் என்பதைக் கண்ட அளவால் புலப்படும். ஏழு செண்டு, ஏழு செண்டு இரண்டு வளையம் (லிங்சு), என்று நிலம் தந்தவர்கள் உளர். அவற்றின் நிலவரி ஏழு அணா ஐந்து பைசா, எட்டணா. இவற்றை வழங்கிய வள்ளல்கள் தம் செல்வம் எங்கே எவ்வளவு என்று கணக்கிட முடியாப் பெருஞ்செல்வர்களா? பண்ணையார்களா? தொழிற்சாலைத் தோன்றல்களா?

நிலம் எழுதிக் கொடுத்தவர்களுள் இருபத்து மூன்று பேர் கையெழுத்துப் போடத் தெரியாத 'கீறல்' வைப்பாளர். கையெழுத்துப் போட்டவர்களும் கயிஎழுத்து, கயி எழுது, கையிழுத்து, காயிழுத்து, கையியெழுத்து என்றெழுதியவர்களே பலர். கையெழுத்து, கைஎழுத்து என்று எழுதியவர் நால்வரே.

அறுனாசல செட்டி, னாறாயணன்பசி, கொமறசாமி படயாசி, தங்கள் பெயர்களைத்தான் இவ்வாறு எழுதியுள்ளனர்!

வள்ளலார்க்கு உதவுவதே வாழ்வாவது என்று கொண்டால் அன்றி இவ்வெளிய வறியவர் தம் உடைமையாக இருந்தவை எவையோ அவற்றில் ஒரு நூற்றில் ஓராயிரத்தில் ஒரு பங்கு என்று இல்லாமல் முற்றாக எழுதித் தந்திருப்பர்? முழுதுறு ஒப்படைப்பு இதுவே என்பது தகும்! கல்லார் மிக நல்லர் என்பதும் ஏற்கும்!

இவர்களை இப்பாலே வைத்து, அப்பாலே நோக்குவோம்! பெருத்த வேளாண்மையரும் இலக்கம் கோடி தேடிய நிதிப் பெருக்கரும் செய்த செயலை வள்ளலார் காண்கிறார்! அவர்க்குக் கலக்கமாகிறது! இவர்கள் கல்லா! மண்ணா! கனிவு என்னும் பொருள் ஒன்றை இவர் கண்டறியவே மாட்டாரோ என நைகிறார்.