பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

வேள்வியின் அழகியல் விளம்பு வோரும் கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப ஊழுற முரசின் ஒலிசெய் வோரும் என்றூ முறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும் இரதி காமன் இவளிவன் எனாஅ விரதியர் வினவ வினாவிறுப் போரும் இந்திரன் பூசை இவளக லிகையிவன் சென்ற கவுதமன் சினறுறக் கல்லுரூ ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும் இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவுஞ் சுட்டறி வுறுத்தவும் நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச் சோபன நிலையது துணிபரங் குன்றத்து மாஅன் மருகன் மாட மருங்கு; பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை பிறங்கல் இடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான் வந்த நெறியு மறந்தேன் சிறந்தவர்

ஏஎ யோஒ எனவிளி ஏற்பிக்க ஏஎ யோஒவென் றேலா அவ்விளி அவ்விசை முழையேற் றழைப்ப அழைத்துழிச் செல்குவள் ஆங்குத் தமர்க்கா ணாமை மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே வாழ்த்துவப்பான் குன்றின் வகை; நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறிணர்ச் சினைபோழ் பல்லவந் தீஞ்சுனை யுதிர்ப்ப உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர்முகிற அவைகிடப்பத்

தெரிமலர் நனையுறுவ

ஐந்தலை அவிர்பொறி அரவ மூத்த

மைந்தன் அருகொன்று மற்றிளம் பார்ப்பென

ஆங்கிள மகளிர் மருளப் பாங்கர்

பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்

கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை உருவமிகு தோன்றி ஊழிணர் நறவம்

87