பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

‘மறங்கடைக் கூட்டிய துடிநிலை

சிறந்த கொற்றவை நிலை'

என்று கூறும் தொல்காப்பியம் (புறத். 4). இத்துறையைத்துடி நிலை, கொற்றவை நிலை என இரண்டாக்கிக் கொள்ளும் புறப்பொருள் வெண்பா மாலை. அது

'ஒளியின் நீங்கா விறற்படையோன்

அளியின் கொற்றவை நிலை'

எனக் கொற்றவை நிலையின் இலக்கணம் கூறும். மேலும் வஞ்சித் திணையிலும் கொற்றவை நிலையைக் குறிக்கும் புறப்பொருள் வெண்பாமாலை, இருவகை நெறியதாய் அதனைக் காட்டும்.

'நீடோளாள் வென்றி கொள்கென

நிறைமண்டை வலனுயரிக்

கூடாரைப் புறங்காணும்

எனவும்,

கொற்றவை நிலை உரைத்தன்று’

மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும் அந்தமில் புலவர் அதுவென மொழிப எனவும் அதன் இலக்கணம் கூறப்படும். (வஞ்சி.5,6) அது கொற்றவஞ்சி கொற்ற வள்ளை என்பவற்றையும் விரித்துரைக்கும். இவற்றுக்கு அடியாக வஞ்சித் திணையில் கொற்றவள்ளை என்பதொன்றைச் சுட்டும் தொல்காப்பியம். அது குன்றாச்சிறப்பின் கொற்றவள்ளை' என்பது (புறத்.8)

'வெற்றிவேற்றடக்கைக் கொற்றவை' எனப்படும் தாய்த் தெய்வ வழிபாடு, வீரர்கள் வழிபாடாகவே பெரிதும் இருந்துள்ளது. புறத்திணையில் பூரிக்க வழிபடும் இறையாகத் திகழ்ந்துள்ளார் கொற்றவை.

'வந்த நிரையின் இருப்பு மணியுடன்

எந்தலை நின்றலை யான்தருவன் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றம் கொடு'

என்பது பெரும் பொருள் விளக்கம். இவ்வெண்பா 'புறத்திரட்டில் நிரைகோடல் பகுதியில் இடம் பெறுகின்றது (1238). வெட்சித் திணையில் கொற்றவைக்குப் பரவுக் கடன் பூண்டது (தெய்வம்