பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

35ஓ

ஆறாத வெம்பசித் தீயால் உயிர்பருகி மாறா மறலி வயிறு

என்றும் (17) வருவன அவை.

உயர்வு நவிற்சி:

உயர்வு நவிற்சியணியையும் பெரும் பொருள் விளக்கம் கொண்டுள்ளது. வேந்தன் ஏவலால் வீரர் ஆகோளுக்குச் சென்றால், நாளை அவ்வாக்கள் தம் கன்றினை நினைத்துச் சுரந்தொழுகும் பாலால் ஊரே நனையும் என ஊரவர் கூற்றாகக் கூறுகிறார்.

'வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால்

தாள்வல் இளையவர் தாம் சொல்லின் - நாளைக்

கனைகுரல் நல்லாயின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர்'

என்பது அது.

ஆவின் பாலால் ஊரே நனையும் என்றது உயர்வு நவிற்சியாம். இயல்பு நவிற்சி

உள்ளது உள்ளவாறே கூறும் இயல்வு நவிற்சி யழகும் பெரும் பொருள் விளக்கம் கொண்டுள்ளது.

முதியோன் ஒருவனைக் குறிக்கும்போது,

'திரைகவுள் வெள்வாய்த் திரிந்து வீழ் தாடி

நரை முதியோன்’

என்கிறது (3) சுருக்கம் விழுந்த கன்னம், வெளிறியவாய், சுருண்டு தொங்கும் தாடி, நரை, முதுமை ஆகியவற்றைச் செறிந்த அமைவால் சிறந்த சொல்லால் உள்ளது உள்ளவாறே கூறும் அழகு உவகைப் பெருக்காம்.

முரண் :

முரண் என்பது நயத்தகும் அழகுகளுள் ஒன்றாம்.

வசை, இசை என்பவற்றை,

'வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.'