பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

'மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி, விண்ணொடு சார்த்தி

விடும்'

என ஏணிமயக்கம் (23). கூறுதல், சொற்பொருட்பின்வருநிலை அழகாம். வீடு திரும்பும் ஆண் மெல்ல நடவாமல் விரைந்த விரைவை, தெள்ளறல் கான்யாற்றுத் தீ நீரைக் கடக்கும் வீரர், கீழே கிடக்கும் நீரைக் குடிக்கவும் விடாமல் ஓட வைத்தலால் விரைவுக் குறிப்பை உணர்த்தும் அழகு எண்ணி எண்ணி மகிழத் தக்காம் (7). வாழ்த்து:

வெண்பாவால் இயலும் இவ்விளக்கத்தில் வரும் வாழ்த்துப்பா, மருட்பாவால் அமைந்துள்ளது. வாழ்த்து என்னும் அதிகாரத்தில் புறத்திரட்டில் புறப்பொருள் விளக்கப் பாட்டொன்று இடம் பெற்றுள்ளது. அதே பாடல் நச்சினார்க்கினியரால் புறநிலை வாழ்த்துக்கு எடுத்துக்காட்டாகப் புகழப்படுகின்றது.

'வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ'

என்பது அதன் இலக்கணம் (தொல் செய். 109)

தொல்காப்பியம்,

‘கைக்கிளை தானே வெண்பா வாகி

ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே’

எனக் கைக்கிளைப் பாட்டின் இலக்கணம் கூறுகின்றது. மேலும்,

'புறநிலை வாயுறை செவியறி வுறூஉஎனத் திறநிலை மூன்றும் திண்ணிதில் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின் என்ப

என்றும் கூறுகிறது (செய் 118: 159)

ஆகலான், வஞ்சியும் கலியும் வாழ்த்து வகைக்கு ஆகாதென ஒதுக்கப்பட்டமையும் வெண்பாவும் அகவலும் ஆகுமெனக் கொள்ளப்பட்டமையும் அறியலாம். வெண்பா, அகவல் என்பவை