பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சித்திணை

(இயங்குபடை அரவம்)

12) விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையர் ஆர்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் உள்ளம்

இருபாற் படுவ தெவன். - பு.தி. 1255.

மேற்கோள்: 'இயங்கு படை அரவம்' என்பதற்கு எடுத்துக் காட்டு (தொல்.புறத்.8.நச்.)

பொருள்

விளக்கம்

விண்ணுலகு எமக்கு எய்தட்டும் எனப் போரை விரும்பிச் செல்கின்ற வேற்படை வீரர் ஆரவாரிக்க, மாற்றார் மண்ணை விரும்பிச் செல்கின்றான் வாட்படை வேந்தன். வேந்தனும் வீரரும் இவ்வாறு ஒருப்பட்டுச் செல்வதைக் கண்ட பகைவர் தம் உள்ளத்தில் ஒருபாற்படுதல் இலராய் இருபாற் பட்டனர்! ஈ தென்னே!

ஒருபாற்படர்தர இருபாற்படுவது எவன் என்றது முரண் வழிவந்த நயம். விண்ணசையினர் வேலிளையர் ; மண்ணசையினன் வாள்வேந்தன். இருவர் 'நசை'யும் ஒருபாற்படுதல் போர்க்களத்தில் ஒருமைச் செயலாற்றுதலாம். ஒன்னார் - ஒன்றார்- பகைவர். அவர்கள் வீரரும் வேந்தரும் ஒருப்பட்டுப் பொருவான் நிற்றலைப் பார்த்த அளவால் உய்வோமோ உய்யோமோ எனத் தோன்றிய ஐயம். இருபாற்பட்டுச் சேறல் 'கவலை' எனப்படும். ஐயம் கிளர்ந்த அளவான் இனி வெல்லார் என்பது னி தெளிவாம். அவர்தம் ஐயமே அவர்க்கு அழிவாக முந்து நிற்கும் என்க.

விண்ணுல காள்வை நோக்கிச் செல்லும் துணிவு மிக்க வீரர் அச்சம் என்னும் பெயர்தானும் அறிவரோ? எண்ணம் ஒருபாற்படர்தல் என்பது ஊக்கம், உரன் என்பவற்றின் விரியாம்.