பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

மறம் மறல் மறலி. மறலி -கூற்றவன். மறம் - வீரம். அவன் அழிவு செய்யும் மறலி எனினும் ஒருபாற் கோடாத உள்ளத்தனாகலின் 'அறவோன்' எனவும் படுவான்.

உட்புகுந்தன்றி உண்ணேம் என்பதற்குக் குறியாக அகப்பையும் துடுப்பும் மதிலுள் எறிந்து விடுதலும், பின்னர் மதிலுள் புகுந்து அட்டுண்ணலும் முந்தையோர் வழக்கு.

தேரான் போனகம் புக்கன்றிக் கொள்ளான்; மறலி வயிறு எற்றாங்கொல்' என இயைக்க.

அகத்தோன் செல்வம்

(மதிலின் அகத்துள்ளான் வளப்பம் கூறல்)

18) பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போல் அஞ்சி - ஒருவரும் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து. - பு.தி. 1338.

(17)

மேற்கோள்: அகத்தோன் செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டு (தொல்.புறத்.12.நச்.) 'அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்; அவை படைகுடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப்பொருள் மேம்படு பண்டங்களும் முதலியவாம்' என்பது அவர் விளக்கம்.

பொருள்

விளக்கம்

போரிட்டு வந்து அப்போர்த் தன்மை மாறாத ஆண்புலி உறையும் கிட்டுதற்கு அரிய மலையைக் கண்டார்போல், பகைவர் எவரும் அச்சத்தால் அணுகுதற்கு இல்லாத மதிலுள்ளே தேர்ப்படைச் சிறப்புவாய்ந்த வேந்தன், தன்னை வேண்டிவந்தார் அனைவருக்கும் அவர் வேண்டுவன எல்லாம் கொடுத்துச் செம்மாந்திருந்தான்.

'புலியடித்தது பாதி கிலியடித்தது பாதி' என்பது பழமொழி. வேந்தனைப் பொருசின மாறாப்