பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ புறத்தோன் வீழ்ந்த புதுமை

(மதிற் புறத்தோன் மதிலைப் பற்ற விரும்புதல்) 25) வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி ஒதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்தோய் புரிசைப் பொறியும் அடங்கினவால் ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு. - பு.தி. 1329.

மேற்கோள்: 'இது புறத்தோன் வீழ்ந்த புதுமை' (தொல். புறத்.13.நச்.). 'இடைமதிலைக் காக்கின்ற அகத் துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கொண்ட புதுக்கோள்' எனப் பொருள் விரிப்பார் அவர்.

பொருள் : முகில் சூழ்ந்து வானளாவி நிற்கும் மதிலின் பல்வகைப் பொறிகளம் ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் அடக்கம் போல் அங்கே அடங்கின. ஆகலின் கொடிய சினம் கொண்டு வந்த வேந்தன் மதிலைக் கொள்ளுதலை விரும்பும்போது, அஞ்சி அகலாதவர் எவரும் உளரோ? இலர்.

விளக்கம் :

புரிசை -மதில். அதன்கண் பல்வேறுவகைப் பொறிகள் உண்மை சங்க நூல்களால் அறியப் பெறும். வளைவிற்பொறி, கருவிரல் ஊகம், கல்லுமிழ்கவண், பரிவுறுவெந்நெய், பாகடுகுழிசி, காய்பொன்னுலை, கல்லிடு கூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலை அடுப்பு,கவை, கழு, புதை, புழை, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல் என்பன சிலம்பாலும் (15.207-216), சதக்கினி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி,குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி என்பன அடியார்க்கு நல்லார் உரையாலும் அறியப்பெறும் மதிற்பொறிகளாம்.