பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திணை

பேய்ப்பக்கம்

69. புண்ணனந்த ருற்றானைப் போற்றுநர் இன்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - உண்ணும் முளையோரி உட்க உணர்பொடு சா யாத இளையோன் கிடந்த இடத்து.

தலையொடு முடிதல்

70. நிலையில் உயிரிழத்தற் கஞ்சிக் கணவன்

தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தாள் - தலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றதன் உண்ணின்ற தன்றோ உயிர்.

கையறுநிலை

71. தேரோன் மகன்பட்ட செங்களத்துள் இவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா

வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ அலகற்ற கற்பி னவள்.

காடு வாழ்த்து

72. உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலைநன் காடு புலவுங்கொல் என்போல் புலவுக் களத்தோ டிலை நெடுவே லோனை இழந்து

பாடாண்டிணை

வெட்சி வாகைப் பாடாண்

புறத். 24

73. முனைப்புலத்துக் கஃதுடை முன்னிரைபோல் வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - எனைப்புலத்துச் சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போல்

நன்றுமுண் டாக நமக்கு.

கொடிநிலை வாழ்த்து

- புறத். 25

74. மேகத்தான் வெற்பான் இமையான் விழுப்பனியான்

ஆகத்தான் நீமறைய நாட்கதிரே - யோகத்தாற்