பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தோணோக்கம் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

"தோணோக்கம்", என்பது மணிவாசகர் பாடிய இசைப் பாவகையுள் ஒன்று. அஃது எத்தகைய ஆடலைக் குறிப்பது என்பதை விளக்குகிறது இப்பரிபாடலில் வரும்,

66

“துடிச் சீர்க்குத் தோள் ஊழ் பெயர்ப்பவள்கண்”

என்பது, துடி ஒலிக்குத் தகத்தோளை அசைக்கிறாள்: தோளை மட்டுமோ அசைக்கிறாள்! கண்ணையும் அசைத்து இப்பாலும் அப்பாலும் நோக்கிக் காட்சியைக் கவினுறுத்துகிறாள். தோள் சைவை நோக்கி யசைத்து ஆடும் ஆட்டத்தைத் தோணோக்கம் என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது. பரிபாடலார் காலத்தில் பயில வழங்கிய இவ்வாடல் மணிவாசகர் காலம் விளங்கியமை தெளிவாகின்றது. மறைந்து போன ஆடற்கலைச் செல்வங்களுள் ஒன்றாக அமைந்துவிட்டது; இது கால், தோணோக்கம்.

ஒவியக் கூடம் :

வரை

பரங்குன்றில் கோயிலின் ஒருபால் இருந்த ஓவியக் கூடம் எழுதெழில் அம்பலம் என்பது. அவ்வம்பலம் காம வேளின் அம்புத் தொழில் பயில்கின்ற சாலை போன்றது. அக்கலைக் கூடம், காதலர்க்குக் கழிமகிழ்வூட்டி வருதலை நோக்கக் காமவேளின் படைக்கலம் பயில் சாலையாக எண்ணப்பட்ட தென்க. அதில் இருந்த ஓவியங்கள் அத்தகைய கொள்கை வனப்புடையன என்பதாம். அன்றியும் அழகுக்கு அளவுகோ லெனச் சொல்லப்படும் காமன் உருவும் அவன் தேவி உருவும் ஆங்கிருந்த ஓவியங்களுள் இருந்தன என்பதும் எண்ணத் தக்கது.

எழுதெழில் அம்பலம் எனப்பட்ட இது, எழுத்து நிலை மண்டபம் எனவும் பட்டது (19:53). அக்காட்சிகளையும் அக்காட்சிகளின் வரலாற்றையும் முன்னரே அறிந்தோர் புதிதாகக் காண்போர்க்குச் சுட்டிச்சுட்டிக் காட்டிய செய்தி முன்னரே கண்டுளோம். இவ்வெழுத்து நிலை மண்டபம் ஒன்றன்று; பலபல என்பது,

66

பலபல எழுத்து நிலை மண்டபம்”

என்பதால் அறியவரும். எழுத்தாவது, ஓவியம். பலபல ஓவியங் களையுடைய மண்டபம் என்றும், பலபல ஓவியங்களையுடைய பலபல மண்டபங்கள் என்றும் பொருள்படுதல் கண்டு கொள்க. ஓவியக் கூடம் இவ்வாறமைய ஓவியக் காட்சியை உவமைப் படுத்திக் காட்டும் காட்சியும் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.