பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

-

35

தார்தார் பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார்

மார்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார் கோதை வரிப்பந்து கொண்டறிவார்

பேதை மடநோக்கம் பிறிதாக வூத

நுடங்கு நொசிநுசுப்பார் நூழில் தலைக்கொள்ளக் கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார் வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார் தேரணி யணிகயிறு தெரிபு வருவார் வரிசிலை வளைய மார்பிற வாங்குவார் வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் தோள்வளை யாழி சுழற்றுவார் மென்சீர் மயிலிய லவர்; வான்மிகு வயமொய்ம்பின்

வரையகலத் தவனை வானவன்மகள்

மாணெழின் மலருண்கண்

மடமொழியவ ருடன்சுற்றிக்

கடிசுனையுட் குளித்தாடு நரும்

அறையணிந்த அருஞ்சுனையான்

நறவுண் வண்டாய் நரம்புளர்நரும்

சிகைமயிலாய்த் தோகைவிரித் தாடுநரும்

கோகுலமாய்க் கூவுநரும்

ஆகுல மாகுநரும்

குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர் வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற்

கொத்தன்று தண்பரங் குன்று.

கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்த வேல்

அடும்போ ராளநின் குன்றின்மிசை

ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும்

பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்

வல்லாரை வல்லார் செறுப்பவும்

அல்லாரை அல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச்

செம்மைப் புதுப்பனல்

தடா மேற்ற தண்சுனைப் பாங்கர்ப்

படாகை நின்றன்று