பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"காலே பரிதப்பின" என்னும் குறுந்தொகை செலவையும் (4), பரீஇ" என்பது குதிரைக்க தியாம் ஓட்டத்தையும் (புறம்.4) குறித்தன. குதிரை ஓட்டத்திற்குரிய வையாளிவீதி புரவிவட்டம் எனப்படுதல் அறியத் தக்கது (சூடாமணி 5: 46) குதிரை வடிவ விண்மீனாம் அசுவதி 'பரி' எனப்படுவதையும் சூடாமணி சுட்டும். அதற்குச் சகடம் என ஒரு பெயர் உண்மையும் அறியத் தக்கது, சகடம் - சக்கரம்.

குதிரை ஏற்றம் பரியேற்றம் எனப்படுதல் எவரும் அறிந்தது. குளம், ஏரி, ஆறு முதலியவை நீர்ப்பெருக்கால் உடைப்பெடுத்து விட்டால் அதனை அடைக்கப் புகுவார் வலிய மரத்தூண்களை உடைப்புப் பகுதியில் நிறுத்தி அதன் சார்பில் மரக்கிளை மணல்மூடை முதலியவற்றைச் செறித்து உடைப்பை அடைத்தல் வழக்கம். உடைப்பில் நிறுத்தும் மரத்திற்குப் பரி என்பது பெயர். 'குதிரை மரம்' எனக் கூறுவர். 'பரிநிறுத்துவார்' என்பது திரு விளையாடல் பிட்டுக்கு மண்சுமந்த படலத்துவரும் செய்தி (5)

புறப்பாடல்களில் 'குதிரைமறம்' தனிப்புகழ் வாய்ந்தது. பாண்டியர்களின் பெரும் பொருள் குதிரை வாங்குவதற்குச் சென்றதை வெளிநாட்டு உலாவாணர் வியந்துரைத்துளர்.

பரி என்பது பரிவின்மூலம், பரிவாவது அன்பு ; அவ்வன்பும் அவ்வன்பினால் உண்டாம் பாதுகாப்பும் 'பரி' எனப்படும். பாதுகாப்பு என்பது பிறர் பரம் (சுமை) தாங்கும் பான்மை ஆதலால், அச்'சுமை'யும், அச்சுமை தன் சுமையொடும் ஏறும் சுமையாதலின் மிகையும், அம்மிகை பலர் பாராட்டும் பண்பியல் ஆதலால் 'உயர்வு'ம் ‘பெருமை'யும் ஆகியவெல்லாம் பொருளாகப் 'பரி' சிறந்தனவாம்.

பரி வளைதலாதலும் அன்பாதலும் பிறவாதலும் எப்படி? ஆவும் கன்றும், தாயும் சேயும்,பறவையும் குஞ்சும், சேவலும் பெடையும் வளையவருதலை அறியோமோ? அன்பினால் மட்டுமே வளைதல்?' வம்பினால் ஒரு குட்டிக்கோ குஞ்சுக்கோ இடர்சூழ ஓருயிரி முயலுங்கால் அத்தாய் வளைய வளைய வந்து தன்வலுவெல்லாம் கூட்டித் தாக்குதலை எவரே அறியார்? இதனால் அன்றே வள்ளுவப் பேராசிரியர்,

“அறத்திற்கே அன்பு சார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை”

என்றார். இவண் 'சாரச் சாரச்சார்ந்து, தீரத் தீரத் தீரா' அன்பு வட்டமாதலைச் 'சார்பு'ச் சொல்லால் குறித்தமை கொள்ளற்