பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசை யெழீஇ"

என்பது சிலம்பு (7, 5-8)

பரிவட்டணையின் இலக்கணம் தானே மூவகை நடையின் முடிவிற்றாகி வலக்கை இருவிரல் வனப்புறத் தழீஇ இடக்கை விரலின் இயைவ தாகத்

தொடையொடு தோன்றியும் தோன்றா தாகியும்

நடையொடு தோன்றும் நயத்த தாகும்”

என்றார் அரும்பத வுரையாசிரியர்.

பரிவட்டம் வளைவுப் பொருளதாதல் போலக் கைவிரல் வளைந்தியலும் முடுகலும் பரிவட்டணைப் பெயர்க்கு உரியவை ஆயினவாம்.

பரி- விரி; வட்டணை-வட்டம்; வட்டணை, சுற்றி வந்து நடஞ்செய்தலைக் குறித்தல் (மணி. 7:43). விரிந்து சுருங்கும் இயல்பால் விரற்பெயர் வந்ததறிக.

"கோவைகளை மீண்டும் மீண்டும் வட்டமாக இசைப்பது வட்டணையாகும். முதல் நடை அல்லது முந்திய நடையில் கோவைகளை ஏற்று அவற்றை இரட்டிப்பதே அடுத்த நடை. எனவே முதல் நடைக் கோவைகளை ஏற்று மீண்டும் இரட்டித்து ஒலிப்பதே பரிவட்டணை'

பரிவட்டம்:

77

பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல் (214)

பரிவட்டம், பரிவேடம் என்பதையும் குறிக்கும். பரிவேடம் காண்க. 'பரிசுத்தம்' என்பது பரிவட்டமாதலை வெள்ளி விழாப் பேரகராதி சுட்டும். திருக்கோயில்களில் 'பரிவட்டம்' கட்டுதல்

ன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருந் தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது. இழப்புக் கடனாக மொட்டையடிப் பவர்க்குப் பரிவட்டம் கட்டுதல் பெருவழக்காக இன்றும் உள்ளது.