பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

133

'பருமம்' எனப்பட்டால், அவற்றைக் கொண்ட யானையும் அவ்வியானையொடு ஒருபுடை ஒப்பாகச் சொல்லப்படும் நடவாமலையும் 'பருப்பம்' எனப்படுவது தகவுதானே. அவ் வகையால் மலைக்குப் ‘பருப்பம்’ என்னும் பெயரும் 'பருப்பதம்' என்னும் பெயரும் உண்டாயின. பர்வதம் என்பது வடசொல்; பருப்பம் தென்சொல்.

"நீலப்பருப்பம்" என்பது பெருங்கதை (5-1:181) பருப்பதமலை என்னுமொரு மலையையும் காட்டும் பெருங்கதை (5.3: 55).

மலையமலை' என்பது போல ஒரு பொதுச் சிறப்புப் பெயர் ணையாம். பதம் என்பது திரண்டது, பருமையும் பருவமும் அமைந்தது என்னும் பொருளதாதலும் அறிக. அறியின் 'பருப்பதம்' என்னும் தென்சொல் நிலை தெளிவாம்.'பதம்' திரட்டப்பட்டதாதல் வெண்ணெய்க்கொரு பெயரதாதலால் கண்டு கொள்க.

பருப்பு:

பருப்பு என்பது பருமைப் பொருளது. 'பருப்புடைப் பவளம் போல' என வரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும்

(2273).

"அயிருருப் புற்ற ஆடமை விசயம்

கவலொடு பிடித்த வகையமை மோதகம்”

என்னும் மதுரைக் காஞ்சிக்கு (625-6) "பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடே கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த வகுப் பமைந்த வெம்மை பொருந்தின அப்பம்” என உரை வரைகின்றார் நச்சினார்க்கினியர்.

அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை (195). கும்மாயம் என்பதோர் உணவு. 'குழையச் சமைத்த பருப்பு' என்பார் மணவாள மாமுனிகள் (பெரியாழ்வார் 3, 3:3) பத்து; உ.வே.சா.138.

பருமம் :

மகளிரின் திரண்ட மார்பகம் 'பருமம்' எனப்படும். கொம்மை, கொழுமை என்பன போல அதனியல் விளக்கும் பெயராம். பெண்டிர் அழகென உறுப்பிலக்கணம் சொல்லும் நூல்கள் மார்பகப்பருமை சுட்டுதலும், கோயிற் சிற்பங்களில் காணப்படும் அணங்குகளின் உடற்கூறும் காண்பார் இப் பெயரமைதி பொருந்து மாற்றை அறிவர். இவ்வமைப்பும்