பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கணக்கிற் கொள்ளத் தக்கனவேயாம். நிகண்டு நூல் களையும் அகர வரிசை நூல்களையும் கால வரிசைப்படுத்த இம்முறை உதவும். முன்னே சுட்டிக் கூறிய மூன்று நூற்பாக்களின் ஒப்பீடே இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குதலைக் காண்க.

முதலாம் நூற்பாவில், இரேகை, வரி, பொறி என எழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது மு. வீ. இரேகை, வரி, பொறி, இலேகை, அக்கரம் என எழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது பே.அ.

இரண்டாம் நூற்பாவில், ஊமை, ஒற்று, உடல், என மெய்யெழுத்தின் பெயர்களைக் காட்டுகிறது மு.வீ. உடல் உடம்பு ஒற்று, அல், ஊமை, வியஞ்சனம் என மெய்யெழுத்தின் அல்,ஊமை, பெயர்களைக் காட்டுகிறது பே.அ.மூன்றாம் நூற்பாவில்,வன்மை, வன்கணம், வலி என வல்லெழுத்துப் பெயர் கூறுகிறது மு.வீ. வலி, வன்மை, வன்கணம் பரிசம் என வல்லினம் பெயர் கூறுகிறது பே.அ.

முன்னதில் பின்னது பெருகியது அறிக.

"வினவல் கடாவல் வினா எனப் படுமே"

என்பது முத்து வீரியம் (30)

66

'வினவல் கடாவல் கேள்வி உசாவல் வினா

"

என்பது பேரகத்தியம் (22) கேள்வியும் உசாவும் பெருகிய தறிக.

“அஃ கேனம் தனிநிலை ஆய்த மாகும்”

என்பது முத்துவீரியம் (28)

“அஃகேனம் தனிநிலை முப்புள்ளி ஆய்தம்"

என்பது பேரகத்தியம் (24) முப்புள்ளி மிகைதல் அறிக.

66

'சங்கம் புணர்ச்சி சையோக மயக்கம்

புல்லல் கலத்தலும் பொருளொன் றேயாம்"

என்பது முத்துவீரியம் (66)

"மயக்கம் புணர்ச்சி சங்கமம் சையோகம்

கூடல் கலத்தல் புல்லலொரு பொருட் சொலே'

என்பது பேரகத்தியம் (89) கூடல் கூடிய தறிக.

""