பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் இ

169

பேரகத்தியச் சூத்திரம் எனப்பட்டவற்றை முத்துவீரியத் துடன் ஒப்பிட்டுக் காண்டற்கு வாய்ப்பாக அவ்வவ்விடத்தே அந்நூற்பாக்கள் மேலும் கீழும் வைக்கப்பட்டுள. அவற்றின் நூற்பா எண்ணிக்கைகளும் தரப்பட்டுள்ளன.

பேரகத்திய நூற்பா முற்பட வைத்து, நூற்பா தரப்பட்டுளது.

முத்துவீரிய நூற்பா பிற்பட வைத்து நூற்பா எண் அதன் முடிவில் தரப்பட்டுள்ளது.

பேரகத்தியப் பகுதி முடிந்தபின், "உரைகளில் கண்ட பேரகத்திய மேற்கோள் நூற்பாக்கள்" என்பதும் இணைக்கப் பட்டுளது. பிற்கால உரைகளில் காணும் இவற்றுள் சிலவற்றை யும் இப் பேரகத்தியப் புனைவாளர் இணைத்துக் கொண்டுளார் என்பதையும் அவண் காண்க.

பேரகத்தியத் திரட்டு வெளிப்பட்டு எண்பான் ஆண்டுகள் ஆகிவிட்டமையால், அத்திரட்டை இதன் வழியே முழுதுறக் காணற்கு வாய்ப்பாக நூற்பாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பேரகத்தியம் என்னும் பகுதி நூன் முறையால் அமைந்த தேயாம். அதனை முத்துவீரியத்துடன் ஒப்பிட்டுக் காணவே புலப்பட்டுவிடும். பின்னிணைப்பாம் மற்றவையே 'திரட்டு' ஆகும்.