பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியும் தமக்கவை கருவியும் தாமாம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையான் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்

ஆறன் உருபே யதுவா தவ்வும்

வேறொன் றுடையதைத் தனக்குரி யதையென விருபாற் கிழமையின் மருவுற வருமே

மற்றுச்சொன் னோக்கா மரபின் அனைத்து முற்றி நிற்பது முற்றியன் மொழியே

காலமொடு கருத வரினும் ஆரை

மேலைக் கிளவியொடு வேறுபா டின்றே

காலமும் வினையும் தோன்றிப்பால் தோன்றாது பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே

காலமும் வினையும் தோன்றிப் பால்தோன் றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே.

பே. அ. தி.9