பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

197

எல்லா நூற்பாக்களும் வேண்டா. இறுதிய நூற்பாவை மீண்டும் பார்க்க. 24 அடிகளையுடைய இந் நூற்பாவின் சொல்லழகு எத்தகைத்து ! எனினும் என்ன? பொருள் காண முடிகின்றதா? எவரேனும் இந் நூற்பா கூறும் செய்தியைத் தெளிவாக்கிக் செல்விக்கு எழுதுக என வேண்டுகோள் விடுத்து ஓரைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நூலாசிரியரும் (பொறுக்க) மனத்தகத்துத் தேக்கி வைத்திருந்து ஒப்பித்த பெருமகனாரும் உள்ளார்! அவர் நூற்குச் சான்றுரைத்த பெருமக்களும் உள்ளனர். மாநாடு கூட்டிக் கருத்துரைத்த பேராசிரியர்களும் உள்ளனர். எனினும் ஒருவரும் உரை கூற முன்வாராமை என்ன? இட்டுக்கட்டிய சொற் சிலம்பத்திற்கு என்ன பொருள் கூறுவது?

தமிழ்மயச் சிற்பியார் வெறும் கொற்றரோ கற்றச்சரோ அல்லர். மயநெறியர்; மாநெறியர். அவர் மொழியில் 'கட்டிடம் வரலாமா? கட்டடம் தொழில் பெயர். கட்டுமான வேலையை சுவரை -க் குறிக்கும். கட்டிடம் மனை கட்டும் இடத்தைக் குறிக்குமே! எத்துணை வேறுபாடு?

“குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே'

என்பது தொல்காப்பியம் (44)

"உயிரைங் குறிலே ஓசை நிறை மொழி”

என்பது இவ் வைந்திறம் !

இக் கருத்தில் எவர் முரணர்?

இவ் வைந்திறத்தின் மயக்கோல மாநெறி முற்றிலும் பொய்ம்மை வழிப்பட்டது என்பது நோக்கிய அளவால் எவர்க்கும் புரியும். எனினும் கருமாரியார் வயப்படுத்தும் திறம் பெரிதே ! அவர்தம் கணியப் புலமையும், கருமாரி தாசராம் நிலையும் பலரை மயக்கி அவர் வழியில் ஊன்ற வைத்து உரிமைப் படுத்தியிருக்கக் கூடும். அதன் வரவால் அவர் தனித்தமிழ்ச் சொல்வளப் பெருக்குடையார் என்பது இந் நூலால் வெளிப்படு கின்றது. அவர்தம் தனித்தமிழ்ப் பற்றுமையும் வெளிப்படு கின்றது. அவற்றைக் காண்க.

ஐந்திறம் சங்கச் சான்றோர்களை, 'அழகுறுந் தீந்தமிழ்க் கழகச் சான்றோர்' என்றும், 'ஆன்றவிந் தடங்கும் அருந்தமிழ்ச் சான்றோர்' என்றும் வழங்குவதும், அவர்தம் அவையைச் 'செந் தமிழ்ச் சான்றோர் சீரவை' என்று குறிப்பதும், ஆங்கு அரங்கேறியது, 'அயல்நெறி சாராத் தமிழ்' என்று சுட்டுவதும் (892) நூல் நிறைவில் நெஞ்சு நிறையும் செய்திகளாம்!

-