பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

நூற் கொடைஞர்

‘தொல்காப்பியர் காலம்' என்னும் இந்நூலை அச்சீடு செய்த பெருமக்களைப் பற்றி பதிப்புரை பகர்கின்றது.

நூல் எழுதினாலும் பதிப்பித்தாலும் அதற்கு மூலப் பொருள் பணம் அல்லவோ!

பொருள் தானே, முதல் மூலம் - பொருட்டு -அறம் -

எல்லாம் எல்லாம்!

அப்பொருள் உதவிய கொடைஞர் இயல்பாகவே தவச்சாலை அறவர், புரவலர், நூற்கொடைஞர்! அவர்களே அன்றி, அவர்கள் குடும்பத்தவரும் இணைந்தே!

அவ்வறக் கொடைப் பெருமக்கள்

பேரறிஞர் திருமிகு க. சுப்பிரமணியனார், திருவரங்கம் மருத்துவர் திருமிகு க. கோபாலனார், அரும்பாவூர் உடன்பிறந்த ‘இணையர்' இவர்.

இவர் தம் துணைவியர் தாமும் உடன் பிறந்த 'இணையர்' 'நால்வர் வழி நல்வழி

என

நன்றியுணர்வுடையேன்

இது, தமிழுலகுக்கு வழங்கும் தகவாம் கொடை!

இரா. இளங்குமரன்