பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல் ஓ

35

முட்டுப்பாடுறுவாராயினர். இச் சொற்களின் அடிப்பொருள் தெளியின் ஐயம் அகன்று உண்மை விளங்கும்.

அறிவின் இலக்கணத்தை வள்ளுவனார் நுண்மை, விரிவு, ஆழம் என முக்கூறு படுத்துக் கூறினார்.

"நுண்மாண் நுழைபுலம்”

என்பது அவர் கூற்று. இவ்வறிவின் இலக்கணத்தையே இறைவன் இலக்கணமென இயைந்த மணிமொழியார்,

66

'ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்'

என்றார். இவ்வறிவு நுணுக்கமும், இறைமைக்கூர்ப்பும் நோக்கிய வர்கள் "அறிவே கடவுள்" என்றனர். இது நிற்க.

அறிவின் முக்கூறுகள் நடுவணது அகற்சியாம். அதுவே தலைமையானதுமாம்! 'நடுவணது எய்த இருதலையும் எய்தும்' என்பது இவ்வறிவுப் பொருளுக்கும் பொருந்துவதாம். ஆழ்தலும் நுணுக்கமும் அருந்துணையாம் என்றும் எளிதின் நோக்கினும் தெளிவாம். ஆகலின், அகன்று விரிந்த அறிவாளர்களை 'அகன்றோர்' என்றனர். 'அகன்றோர்' பின்னே 'ஆன்றோர்' ஆயினர்.

அறிவிற்குச் சிறப்பு அகலுதல் போலவே, பண்புக்குச் சிறப்பு 'நிறைவு' ஆகும். மிகுதலும் அதுவே. இதனைக் கருதியே பண்பான் நிறைந்த பெருமக்களைச் சால்பின் அடிப்படையில் 'சான்றோர்' என்றனர். சால்பு -நிறைவு; மிகுதி. சால என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகலின் சால்பின் நிறைந்தோர் சான்றோர் எனப் பெற்றனர் என்க. இவற்றால் ஆன்றோர் சான்றோர் என்னும் சொற்களின் பொருள் நுணுக்கம் புலப்படும்.

அகன்ற அறிவினராம் சங்கப் புலவர்களைப் பண்டை உரையாசிரியர்கள் 'சங்கச் சான்றோர்' என்றது என்னையோ எனின், அவர்கள்,

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்

தந்நோற்போற் போற்றாக் கடை

99

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு”