பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம்

ஆடு கொண்டு கூடுசெய் தமர்ந்தி ருக்கும் ஆறுபோல் தேடு கின்ற செம்பினைத் திடப்ப டப்ப ரப்பியே நாடு கின்ற தம்பிரானும் நம்மு ளேஇ ருக்கவே போடு தர்ப்ப பூசைஎன்ன பூசை என்ன பூசையே. என்னை அற்ப நேரமும் இறக்கி லாத நாதனே ஏக னேஇ றைவனே இராச ராச ராசனே உன்னை அற்ப நேரமும் ஒழிந்தி ருக்க லாகுமோ உனது நாட்டம் எனதுநாவில் உதவி செய்வீர் ஈசனே எல்லை அற்று நின்றசோதி ஏக மாய்எ ரிக்கவே எந்தை பூர ணப்பிரகாசர் ஏக போகம் ஆகியே

நல்ல இன்ப மோனசாக ரத்தி லேஅ ழுத்தியே

37

நாடொ ணாத அமிர்தம்உண்டு நான்அ ழிந்து நின்றநாள். ஆன வாற தாயிடும் அகண்ட மான சோதியை ஊனைக் காட்டி உம்முளே உகந்து காண வல்லிரேல் ஊன காயம் ஆளலாம் உலக பாரம் ஆளலாம் வான நாடும் ஆளலாம் வண்ண நாடர் ஆணையே.

480

481

482

483

நித்த மும்ம ணிதுலக்கி நீடு மூலை புக்கிருந்து

கத்தி யேக தறியே கண்கள் மூடி என்பயன்

எத்த னைபேர் எண்ணினும் எட்டி ரண்டும் பத்தலோ

அத்த னுக்கி தேற்குமோ அறிவி லாத மாந்தரே.

484

எட்டி ரண்டும் கூடியே இலிங்க மான தேவனை

மட்ட தாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல்

கட்ட மான பிறவிஎன் கருங்க டல்க டக்கலாம்

இட்ட மான வெளியினோ டிசைந்தி ருப்பீர் காண்மினே.

485

உண்மை யான மந்திரம் ஒளியி லேஇ ருந்திடும்

தண்மை யான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே வெண்மை யான மந்திரம் விளைந்து நீற தானதே உண்மை யான மந்திரம் அதொன்று மேசி வாயமே.

பன்னி ரண்டு நாள்இருத்திப் பஞ்ச வண்ணம் ஒத்திட மின்னி அவ்வெ ளிக்குள்நின்று வேரெ டுத்த மர்ந்தது சென்னி யான தலத்திலே சீவன் நின்றி யங்கிடும் பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பி ரம்மம் ஆவரே.

486

487