பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

123

குதம்பைச்சித்தர், காப்புச் செய்யுள் பாடினார். அதில் உலகில் அஞ்ஞானம் ஒழிந்திட யார்க்கும், இலகும் கடவுளை ஏத்துகின்றார். அவர் மெய்ப்பொருளை நன்றாகத் தேர்ந்து கூறுகின்றாராம் குதம்பை, நாளும் பொழுதும் அதனை நன்கனம் எண்ணி நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டுமாம்! இதுவே அவர் கூறும் காப்புச் செய்யுள்.

என்னும்

'ஓருருவம் ஒரு நாமம் ஒன்று மில்லான் மணிமொழியை எடுத்த எடுப்பிலேயே நிலைப்படுத்துகின்றார் குதம்பையார்.

குதம்பைச்சித்தர் பாடல்களின் பொருள்வகை கடவுள் வணக்கம், கடவுள்திறம் கூறல், வீட்டையும் வழி, உடலைப் பழித்தல், மயக்கும் மாதரைப் பழித்தல், நிரய (நரக) நிலைமை, பொய்த்தவ வொழுக்கத்தைப் பழித்தல், நிலையாப் பொருள், உடன் வருவன, ஆசையை ஒழித்தல், தவநிலை கூறல், அறிவுவிளக்கம், சாதிவேற்றுமை இன்மை, சமய நிலை கூறல், மந்திரநிலை கூறல், வளி (வாத) நிலைகூறல், மருத்துவம் கூறல், கற்பு நிலைகூறல், திருத்தலங் கூறல், தேவநிலை கூறல், அறியாமை அகற்றல் என இருபத்தொரு வகைத்தாம். இவற்றுள் பொருள் மயக்கமாகிக் கிடப்பனவும் உண்டு.