பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

137

என்பது அது. "வீடுவரை உறவு" என்னும் திரைப்படப் பாடல் எவர் செவிகளிலும் விழுந்தது தானே! அது பட்டினத்தார் விற்ற சரக்கு!

இனி இவர் கூறும் மந்திரநிலைகூறல், வளிநிலைகூறல், மருத்துவங்கூறல், கற்பநிலை கூறல் என்பவை திருமூலர் அருளிய திருமந்திரம், திருமந்திரமாலை முந்நூறு என்னும் நூற்செய்தி களாம். ஆதலால் குதம்பைச் சித்தர் பாடல்களில் உள்ள முற்பகுதி 214 பாடல்களையும் பாடியவர் எவரெனினும் அவர் பரந்த அளவில் நூல்களைக் கற்றறிந்தவர் என்பது புலனாம். ஆகலின் அதனைத் தனிப் பகுதியாகவும், மற்றைச் சித்தர் பாடல் தொகுப்பு நூல்களில் உள்ள பாடல்கள் 32ஐயும் தனிப்பகுதி யாகவும் இந்நூலில் பகுக்கப்பட்டுள்ளனவாம்.

ச.நூலாய்வு

-

முதல்பகுதி (1-214)

கண்டத்தை ஆள்கின்ற காவலன் போன்றவன் அண்டத்தை ஆளும் இறைவன் என ஒப்பிடுகிறார் (45). அண்டத்தைக் கண்டு அதனை ஆக்கினோன் உண்டு என்று அறியக் கூறுகிறார் (134) கண்டது கொண்டு காணாத தறியும் ஏதுவணியின் பாற்படும் இது. 'பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள்' என்பதில் (79) இல் பொருள் உவமையை இயைக்கிறார். "போத மிதென்று மெய்ப் போதநிலை காணல் போதமதாகும்" என்பதில் று (136) சொற்பொருள் பின்வரு நிலையணியை வைத்துளார். "தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர், மேற்பைநஞ்சு உண்பார்" எனச் சொற் பின்வரு நிலையணியைக் காட்டுகிறார்,

(174)

இவர் கூறும் உலக இயற்கை "நீரும் நெருப்பும் நெடுங் காற்றும் வானமும் பாருமாய்" "நின்றது, (24)" நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும், கலந்த மயக்கம் உலகம்” என்று தொல்காப்பியராலும் (1589) அவர்க்குப் பின்னே வந்த பரி பாடல், திருவாசகம் முதலிய நூலுடையாராலும் சுட்டப்பட்ட செய்தியாம். மனத்தை மந்திக்கு ஒப்பிட்டுக் கூறுவதும் (55) பழகிப்போன செய்தியே

இவர்தம் சித்த சமய நெறிக்குள் சைவசமயமே தலை தூக்கி நிற்கின்ற தென்னலாம். இறைவனைப் பொதுவாக 'எந்தை' என்றும் ‘என்தேவு' என்றும் (13, 15) குறித்தாலும், அவன் ஐந்தொழில் (30) முத்தொழில்களை (49)க் குறித்தாலும், சம்பு, சுயம்பு, தாணு கூத்தன் சிவன் (126, 35, 48,38,25) எனத்