பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் – 37

தெளிவாக்குகிறார். 'ஏகன்' என (51)ச் சிறப்பாகவும் பொதுவா கவும் பொருள் கொள்ளவும் வைத்துள்ளார்.

இவர் பல்வேறு சமய நிலைகளையும் அறிந்தவர் என்பது சார்வாகம் (146) நம்பா மதம் (148) பாடாண்மதம் (149) கதிரவமதம் (150) வேதமதம் (152) முதலிய பல்வேறு மதங்களைச் சுட்டுவதால் அறியலாம். அவற்றை எல்லாம் மறுப்பதுடன் கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவு என்றும் (147) நீண்ட குரங்கையும், நெடிய பருந்தையும் வேண்டப் பயன் இல்லை என்றும் (153) கூறுகிறார்.

தாடி சடை வைத்தல் (98) காற்குறடு அணிதல் (99) மணிவடம் உருட்டல் (100) அரைக்கச்சை கட்டுதல் (101) ஆகியவற்றைக் கண்டிக்கிறார்.

பார்ப்பார் சடங்கின் பயனின்மை, பசுக்கொடை புரிதலின் பயனின்மை, வேதத்தின் பயனின்மை, வேள்விகளின் கேடு இவற்றையெல்லாம் விளக்குகிறார். தன்பாவம் நீக்காத தன்மையர் மற்றவர் வன்பாவம் நீக்குவரோ என வினாவி நீக்கார் எனச் சுட்டுகிறார்.(197-203)

சகுனம் பார்த்தல், நல்லநாள் கெட்டநாள் எனப் பார்த்தல், மையோட்டம் பார்த்தல், மாயவித்தை செய்தல், கருவை அழித்துக் கன்மத்தொழில் புரிதல், செய்வினை செய்தல், சோதிடம் பார்த்தல், குறிகேட்டல், பேயாடல் என்பனவற்றை யெல்லால் கடுமையாகச் சாடுகின்றார். (204-212)

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு வரும் என்றும், பிள்ளைகள் செய்யும் நல்லறம் பெற்றோரைக் கடைத்தேற்றும் என்றும் சில கருதுகோள்கள் உள.அவற்றை ஏற்க மறுக்கும் இவர், "அவரவர் வினை அவரவர்க்கே" என்பதை அழுத்திக் கூறுகிறார்:

"தந்தை தாய் செய்வினை சந்ததிக்காம் என்பார் சிந்தை தெளிந்திலரே”

“பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க் குறுமென்றல் வெள்ளறி வாகும்

“பந்தவினைக் கீடாய்ப் பாரிற் பிறந்தோர்க்குச்

சொந்தம தில்லை”

என்பவை அவை.