பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

அகத்தியரால் செய்யப்பட்டதென வழங்கும் 'முப்பு' (158) என்னும் வாகட நூலும், முப்பூ என்னும் மருந்தும் இவரால் சுட்டப்படுகின்றன. இவற்றுள், முப்பூ பல இடங்களில் கூறப்படு கின்றது. (160,170,171)

எட்டெட்டுங்கட்டுதல் (165) நாடி ஒருபது (166) சத்த வகைத்தாது (167) வாயு ஒருபத்து (168) ஆறாறு காரமும் நூறும் (158) ஐந்து சரக்கு (163) நாற்பத்து முக்கோணம் (155) சட்கோணம் (156) ஐந்தெழுத்து (157) முக்குற்றம் (135) முதலியவை இவரால் சுட்டப்படும் எண்ணாட்சிகளாம்.

'லங்கோடு' என்னும் வேற்றுச் சொல்லாட்சியை இவர் ஓரிடத்து மேற்கொண்டுள்ளார் (101). வத்து, கத்தி என்பவை இவரால் 'வஸ்து' 'கஸ்தி' என்றே ஆளப்பெற்றுள. தமிழ் மரபுக்கு ஏற்ப வடவெழுத்தை நீக்கி இவண் பதிப்பிக்கப் பெற்றுள்ளவாம்.

இரண்டாம் பகுதி (215-246)

மெய்யுணர்வாளர் மேம்பட்ட தன்மைகள் இப்பகுதியில் மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்கள்,

‘வெட்ட வெளிதன்னை மெய்யென்றிருப்பவர்'

‘மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானியர்’

'காணாமற் கண்டு கருத்தோடிருப்பவர்'

'வஞ்சக மற்று வழிதனைக் கண்டவர்’

‘ஆதார மான அடிமுடி கண்டவர்’

'நித்திரை கெட்டு நினைவோ டிருப்பவர்’

"தந்திரமான தலந்தனில் நிற்பவர்' ‘சத்தியமான தவத்தில் இருப்போர்' 'நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்’ 'முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானியர்' 'உச்சிக்கு மேற்சென் றுயர்வெளி கண்டவர்' 'வேகாமல் வெந்து வெளியொளி கண்டவர்’ 'சாகாமல் தாண்டித் தனிவழி போவார்' "அந்தரந் தன்னில் அசைந்தாடும் முத்தர்'