பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

குமரன் துணை

குதம்பைச்சித்தர் பாடல்

முதற்பகுதி

காப்பு

வெண்பா.

உலகிலஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இலகும் கடவுளை ஏத்தி - நலமார்

குதம்பாய்! மெய்ஞ்ஞானம் கூறுவேன் நன்கு

நிதம்பார்த்து நெஞ்சில் நினை.

1. கடவுள் வணக்கம்

பூரணம் கண்டோரிப் பூமியி லேவரக்

காரணம் இல்லையடி

காரணம் இல்லையடி.

போங்காலம் நீங்கநற் பூரணங்கண் டோர்க்குச்

சாங்காலம் இல்லையடி

சாங்காலம் இல்லையடி.

செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு

முத்திதான் இல்லையடி

முத்திதான் இல்லையடி.

வத்து தரிசனம் மாட்சியாய்க் கண்டோர்க்குக்

கத்திசற் றில்லையடி

குதம்பாய்

1

குதம்பாய்

2

குதம்பாய்

3

குதம்பாய்

கத்திசற் றில்லையடி

4