பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

பாராட்டிய பெருமக்களுக்கும், நூலுருத் தந்து வெளிப்படுத்திய கழக ஆட்சியாளர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.

இந்நூல் சிவஞான போதப் 'பாலபாட' நூலே எனல் தகும். இதனைக் கற்பார் இதன் அடித்தளத்தில் இருந்து பிறர் பிறர் வரைந்த உரை விளக்கங்களையும், சிற்றுரை பேருரை முதலியவற்றையும் கற்றல் சிறக்கும் எனப் பரிந்துரைத்தலைக் கடனாகக் கொள்கின்றேன். எளியேனைக் கொண்டு இவ்வுரைப் பணியை நடாத்தும் தண்ணார் தமிழன்னையின் திருவருள் மேம்பாட்டை நினைத்து நெஞ்சாரப் போற்றுகின்றேன்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,

தமிழ்ச்செல்வம்,

திருநகர், மதுரை - 6.

தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன்

27-4-'94