பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

பொல்லார் இணைமலர் நல்லார் புனைவர்

181

பொல்லார்-பொல்லாப் பிள்ளையார்; பெயர்; அவர்தம் இணைமலர், இரண்டாகிய திருவடி மலர்கள். புனைதற் குரியவை மலர்கள். ஆதலால், 'நல்லார் புனைவர்' என்றார். அடிமலரைப் புனைதல் எவ்விடத்தோ என்பது புனைதலால் விளக்கினார். சூடுதல், வேய்தல், புனைதல் என்பவை தலைக் கணிதலைச் சுட்டுவன ஆகலின், ஆத்திசூடி கொன்றைவேந்தன் போலப் புனைதல் நின்றதாம். புனைவார் எவர் என்பதை விளக்குமுகத்தான் 'நல்லார்' என்றார், திருவருளால் நற்பேறு வாய்த்தார்க்கே அது கூடும் என்பது மெய்யுணர்வாளர்

உரையாகலின்.

'கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர்

நல்லார் புனைவரே'

என்பது கடவுள் வாழ்த்து.

சுருக்கமும் செறிவும் அமைய இயற்றப்போகும் நூற்கு, அதன் யாப்புரவையும் கோப்புரவையும் குறிப்பாய்ச் சுட்டு முகத்தான் அமைந்த கடவுள் வாழ்த்து இது.