பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

183

இனித், தம்மையுணரார் உளர்; அவரோ தம்மை யுணராமையால் தலைவனையும் உணராதவர்; அவர் தம்முள் ஒன்றுபட்டு உறவாடலும் ஒரு கருத்துக் கொள்ளலும் இலராய்த் தம்முள் முரண்பட்டு நிற்பர். அத்தகையர் சொல்லும் உண்மைக்குப் புறம்பான சொல்லை யாம் பொருட்டாகக் கொள்ளமாட்டோம் என்று அவர்க்கு அவையடக்கம் கூறாது வீறுமொழிந்தார்.

'எல்லா மாந்தர்க்கும் வழிமொழிதல்' என்று கூறிய தொல்லாசிரியர் நெறியை, மெய்கண்டார் புதுக்கிக்கொண்டு உரைத்த அவையடக்கம் இதுவாம்.

தக்காரை வழிபடுதலும் தகவிலரை ஒதுக்குதலும் தகவெனக் கொண்ட பெருமிதம் ஈது என்க.