பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மலத் துளதாம் :

இளங்குமரனார் தமிழ்வளம் -37

அவை கூடிற்று; கூடிய அவ்வவை மீண்டும் கூடுவானேன்? அவையில் எடுத்துக்கொண்ட பொருள் நிறைவுறவில்லை. நிறைவுற்றால் மீண்டும் கூடவேண்டுவது இல்லை. கூடிய ஒன்றே அவையின் ஆய்வுக் கருத்து முற்றுப் பெறவில்லை என்பதைக் காட்டும். முற்றுப் பெறாமையைத் 'தடை' எனலாம். அதுபோல் உலகம் மீண்டும் மீண்டும் தோன்றுதற்கும் காரணம் தடையே யாம். அத்தடையை 'மலம்' என்பது வழக்கு.

ஒடுங்கிய அவை அல்லது உலகு, மலத்தினால் உளதாகும் அல்லது தோன்றும்! மலத்தினால் அவை உண்டாக வேண்டுவ தென்ன! மல நீக்கத்திற்காகவே தோற்றம் உளதாகின்றதாம். கறையைப் போக்கப் பலமுறை வெளுப்பதில்லையா துணியை? களிம்பு போக்கப் பலமுறை விளக்குவது இல்லையா செம்பை? அழுக்குப் போக்கப் பலமுறை துடைப்பது ல்லையா கண்ணாடியை? அவைபோல் என்க.

அந்தம் ஆதி :

அண்டம் என்பது உலகம் எனக் கண்டோம். அண்டம் என்பதற்கு முட்டை, விதை முதலியன பொருள்கள். அதன் வடிவம்,வட்டம் என்பதே. உலகின் வடிவமைப்பை உள்ளடக் கிய பெயர்கள் அண்டம், உலகம், பார் முதலியன. வட்டத்தில் முதல் எது? முடிவு எது? முதலும் முடிவும் ஒன்றே. தோன்றும்

டமே முடிவிடம்; முடிவிடமே தோன்றுமிடம். பிணையல் வரிசையில் எவ்வரிசை முதல் வரிசை? எவ்வரிசை இறுதி வரிசை? எதுவும் முதல்; எதுவும் இறுதி! இவ்வட்டச் சுற்றே படைப்பியல் சுற்று!

கடலில் இருந்த நீர் ஆவியாகவில்லை? ஆவி மேலே மேலே சென்று குளிரவில்லையா? குளிர்ந்து மழையாய் -அருவியாய்- ஆறாய்-காலாய் நடந்து கடலைச் சேரவில்லையா?புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்த நீரின் சுழல் நடை, முதலும் முடிவும் காட்டும் நடை! அந்தமும் ஆதியுமாம் கடல்போல், உலகின் அந்தமும் ஆதியும் ஆகின்றவன் இறைவன். நீர்க்கு அந்தத்தைச் செய்யும் இடமும், ஆதியைச் செய்யும் இடமும் வெவ்வேறல்ல! ஓரிடமே! அதுபோல் உலகுக்கு ஆதியும் அந்தமுமாக அல்லது அந்தமும் ஆதியுமாக இருப்பவன் ஓர் இறைவனே! அந்தமும்