பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் 37

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்த மாமே”

என்பது திருமூலர் வாக்கு. ஈகனை எய்தும் எண்ணத்தோடுகூட, வழிபடல் ஆகாது எனின் பிறவினைகளைக் கூறவேண்டுமோ?

இருவினை நீக்கத்திற்கு வழியென்ன? முதற்கண் இருவினை யொப்புக் காணவேண்டும். இருவினை யொப்பாவது நல்வினை தீவினை நுகர்ச்சிகளை ஒப்பாகக் கருதும் ஒருநிலை. இன்பத்தை விரும்பும் நாம் துன்பத்தைக் கண்டு வெறுத்தல் ஆகாது! இன்ப விரும்பும், துன்ப வெறுப்பும் நீங்கி இரண்டையும் ஒன்றாகக் கருதி, "இன்பம் வரினும் வருக; துன்பம் வரினும் வருக; ஏற்றுத் துய்க்கத் தக்கனவே" என்னும் மனநிலை வந்துவிடின் அவனை வினை என் செய்யும்? விதி என் செய்யும்? விதிக்கு விதி அவனே ஆகலின், அவனிடம் விதி தோல்விகண்டு ஒதுங்கிப்போம்! வினையின் ஆட்சிக்கு இடமில்லா இடத்தில், வினைக்கு என்ன வேலை?

இருவினை உயிர்களைத் தொடர்வானேன்? அவனை மாசு நீங்கிய மணியாக்குதற்கு, கறைநீங்கிய கண்ணாடியாக்குதற்கு இருவினைகள் தொடர்கின்றன.

இருவினை என்ன செய்கின்றன? எப்படித் தொடர் கின்றன? இவற்றுக்கு விளக்கம் சொல்கிறார் மெய்கண்டார்: போக்குவரவு புரிய :

இருவினையால் போக்குவரவு நிகழ்கின்றன. 'போக்கு வரவு' என்பது 'போதல் வருதல்' என்னும் பொருள்தரும் சொல்லாக இந்நாள் ஆளப்படுகின்றது. 'போக்குவரவுத்துறை' என்னும் அரசுத்துறையொன்று உண்மை இதற்குச் சான்று. ஆனால், மெய்கண்டார் போக்குவரவு என்பதனை 'இறப்பு பிறப்பு' என்னும் பொருளில் ஆட்சி செய்துள்ளார். போக்கு இறப்பு: வரப்பு பிறப்பு! பிறப்பு ஒழிதலும், இறப்பு வருதலும் ஒரு போக்குவரவுதானே! போக்குவரவு புரிவதற்காகவே இருவினைகள் தொடர்கின்றன என்று விளக்குகிறார். ஆகலின் வினையுள்ள வரை பிறப்பறுப்பு இல்லை என்றும், வினை நீக்கமே பிறப்பறுப்பு என்றும், அதுவே விடுதலை அல்லது வீடுபேறு என்றும் கொள்ள வைத்தார். "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்றார் திருவள்ளுவர்! "அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்றார் ஒளவையார். உயிர் போக்குவரவு புரிய, இறைவன் தானே செயல்