பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம்

37

இன்மை" என்றார். அவன் உணரப் படாதவன் அல்லன்; அவன் உணரவும் படுவான் என்பது கருத்தாம்.

'இன்' என்பது ஆகலின் என்பதன் தொகுத்தலாய் நின்றது. இருதிறன் அல்லது சிவசத்தாம் :

இறை, முற்படக் கூறிய உணர் உருவும் அன்று; பிற்படக் கூறிய உணரா உருவும் அன்று; ஒருவகையால் அறியப்படுவதும் ஒருவகையால் அறியப்படாததும் ஆகியது. ஆதலால் சுட்டப் பெற்ற இரு வகுப்பிலும் சேர்ந்த ஒன்றன்று இறை என்பாராய் "இருதிறன் அல்லது" என்றார்.

பொய்ப்பொருளாயும் இல்பொருளாயும் இல்லாத மெய்ப்பொருளாம் இறையை, எப்பொருள் எனச் சொல்வது என்பார்க்குப் பெயரீடாகச் 'சிவ சத்தாம்' எனக் கூறினார். 'இறை நிலை' என்பது சிவசத்து என்பதன் பொருளாம்.

என மன் உலகு இரண்டு வகையின் இசைக்கும் :

"என்று நிலைபெற்ற மெய்ப்பொருள் ஆய்வுடைய பெரு மக்கள், ஓராற்றான் அறியப்படுவதும் ஓராற்றான் அறியப் படாததும் ஆகிய இருவகையுடையது இறை என்று கூறுவர்" என்பது இதன் பொருளாம்.

மன்னுதல், நிலைபெறுதல்; உலகு என்பது முதல் நூற்பாவிற் சுட்டிய புலவரைக் கருதியது. "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே, நிகழ்ச்சி அவர்கட் டாகலானே" என்பது தொல்லாசிரியர் குறியீடு ஆகலின்.

இவ்விடத்துச் சில கருத்துகளைத் தெளிவாக்கிக் கொள்ளல்

வேண்டும்.

உயிர் அழிவற்றது ஆதலால் அது நிலை (சத்து) என்று கூறப்படும். தோற்ற ஒடுக்கம் இல்லாதவனாகவும் உலகுக்குத் தோற்ற ஒடுக்கம் செய்பவனாகவும் இருக்கும் இறைவனும் 'நிலை' என்பது தெளிவு. உயிரையும் உயிர்க்கு உயிராம் இறையையும் ஒத்த பெயரால் நிலை (சத்து) என்று சுட்டுவது தெளிவுடைய தன்று என்பாராய் இறைநிலை (சிவசத்து) என்று சொல்லாட்சி கொண்டார்.

உயிரில்லா உருவப்பொருள் அருவப் பொருள்களை மெய்ப் பொருளாய்வாளர்கள் அல்நிலை (அசத்து) என்று