பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

அவற்றைப்போல் அஞ்செழுத்தை எண்ணினால் போதாது; ஆணையாகக் கொண்டு ஓதி ஓதித் திளைக்க வேண்டும்.

“நான் மறக்கினும் சொல்லுநா நமசிவாயவே" “வழுக்கி வீழினும் சொல்லுநா நமசிவாயவே" என்பனபோல் சொல்லவேண்டும் என்றார்.

அழுத்தமில்லாத பற்று அடிக்கடி சறுக்கும்; சறுக்கல் முதிர்ந்து மறந்தும் துறந்தும் போம். பாசிபடிந்த நீரில் கைவைத்த அளவில் பாசி விலகுமாப்போல் பற்றும் விலகும். கையை எடுத்த அளவில் பாசி முன்னைப்போல் கூடிவிடும். அழுத்தமில்லாத பற்றுமையால் மலமும் அப்படியே விலகும்; மீண்டும் சேரும். மலநீக்கம் முற்றாக வேண்டுமானால், 'விதி எண்ணும் அஞ்சு எழுத்தே' என்றார்.

நமசிவாய என்பது ஐந்தெழுத்தோ? 'சிவயநம' என்பது ஐந்தெழுத்தோ?

'நமசிவாய' என்பது பெயர். 'நந்திநாமம் நமசிவாயவே' என்றார் ஆளுடையபிள்ளையார். 'நமச்சிவாய வாழ்க' என்றார் ஆளுடைய அடிகள். பெயர் மந்திரமாவதில்லை. எழுத்தே மந்திரமாம் என்பாராய் எண்ணுமஞ் செழுத்தே என்றார். 'சிவயநம' என்பதே ஐந்தெழுத்து மந்திரமாம்.

“அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே”

என்பது திருமந்திரம் (934).