பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

அதிருங் கழற் பெருமாள் புயங்கள், குழைக்கு உறவாய் இசைந்தன; பனிநீர் துளைந்தன; திருநீறணிந்தன; தலையே வழங்கின; தடமார்பு இடந்தன; அதிலே குழைந்தன; பொருப் பெனவே வளர்ந்தன; தொடையான் நிறைந்தன; சிலைநாண் எறிந்தன; பொருபோர் புரிந்தன; முத்தலைவேல் உவந்தன; உரிபோர்வை கொண்டன; பணியால் மலிந்தன; அழகோடிருந்தன; புகலி இறை, அரசு, சுந்தரப் பெருமாள் புகழ்ந்தன என இயைக்க. தீக்கடவுளின் கைவெட்டுதல் முதலியவை தக்கன் வேள்வி யின் போது நிகழ்ந்தன.

மேருவை வில்லாக வளைத்தது, முப்புர அழிப்புக்கு நிகழ்த்தியது ஆகும். தாரகாட்சன், கமலாட்சன், வித்துன்மாலி என்னும் அசுரர் மூவர் நகரங்களும் முப்புரங்கள் என்பன; அவை முறையே தங்கம் வெள்ளி இரும்பு மதில்களையுடையன என்பர்.

பாசுபதம் அருச்சுனனுக்கு வழங்கியமை பாரதத்துக்

கண்டது.

கொங்கையின்

சுவடுபடக் குழைந்தது காஞ்சிப் புராணத்துத் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது.

மூவர் முதலிகளின் மேல் எல்லப்ப நாவலர் கொண்ட முதிர்ந்த ஈடுபாட்டை, "அருமறை..புகழ்ந்தன' என்பதால் அறிலாம். இவ்வாறே மூவர் அன்பை முன்னும் புலப்படுத்தினார். பின்னும் கூறுவார்.(13)

14. அயர்ந்திவள் வாடத் தகுமோ?

தலைவனை வேண்டல்

எண்சீர் விருத்தம்

புயந்தழுவும் கண்ணியும்செவ் விதழி யேமால்;

பூண்டகயற் கண்ணியும்செவ் விதழி யேமால்; வியந்துசொலின் அன்னதும்பொன் நிறமே; எங்கள் மின்னிறமும் பொன்னிறமே; புயம்பெறாமல்

அயர்ந்திவள்வா டத்தகுமோ? அருட்கண் பாரீர்,

அருணகிரிப் பெரியீரே! அமல ரே!நல் வயந்தவிழா அழகரே! நினைக்க முத்தி வரந்தருவா ரே! மலைமேல் மழுந்த னாரே.