பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம்-38

சூடாத மாலை சூடுவர் தோளோடு தோளை வீசுவர்

சோணாச லேசர்சோ பனமா

ஆடாத ஆடல் ஆடுவர் பாடாத பாடல் பாடுவர் ஆராத ஓகைகூ ருவரே.

(பொ-ரை.) அண்ணாமலையார், பெரிய கடலும், நிலமும், விண்ணும், தீயும், காற்றும் - இவற்றுள் அமைந்தவை எல்லாமும் சாம்பலாகிவிடும் ஊழிநாளில், சங்கும் சக்கரமும் உடைய திருமால், நான்முகன் ஆகியவர்களின் இறந்த எண்ணற்ற தலைகளைத் தம் சடைத் தலைமேல் பிறர் சூடாத மாலையாகச் சூடுவர்;தோளோடு தோளை வீசிக் களிப்பர்; மங்கலமாக ஆடாத ஆடல்களையெல்லாம் ஆடுவர்; பாடாத பாடல்களை யெல்லாம் பாடுவர்; அளவிறந்த உவகை அடைவர்.

(வி-ரை.) உலகை விரித்த இறைவன், அதனை ஒடுங்கிய நிலையைக் கூறியது ஊழி நிகழ்ச்சியாம். கோடு - சங்கு; ஆழி - சக்கரம்; மால் - திருமால்; பிதாமகன் -நான்முகன்; இவர்கள் எண்ணற்றவராய் அழிந்தமை,

“நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே"

என்னும் நாவுக்கரசர் வாக்கால் புலப்படும்.'நூறான கோடி என்றது 'எண்ணற்ற' என்னும் பொருட்டது. சூடாத மாலை என்றது தலை மாலையை; ஆடாத ஆட்டம் என்றது பாண்டரங்கம், கொட்டி என்னும் ஆட்டங்களை; பாடாத பாடல் என்றது 'சாமகானம்' என்பர்; ஆராத ஓகை என்றது ஊழிக்காலக் கெக்கலியை.

(24)

25. புன்னையே! உன்னையும் நீத்தார் உளரோ? புன்னாகம் கண்டு இரங்கல் கலித்துறை

கூத்தாடும் அருணேசர் வரையன்பர்

பொருளன்பு கொண்டுன்னையும்

நீத்தார்கொல்; நிழராரும் இலையாகி

நின்றாய்;நெ டுங்காலமே;