பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 31. இனி எழுதேன் இருப்பு மனம் தலைவன், தலைவியின் உறுப்பருமை கூறி எளிதில் ஓவியம் வரைவேன் எனல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

மலையாச னத்தர்மலை மயிலாச னத்தர்எழு

மலையானி லத்து வருவார்

அலையாச னத்தரொடும் அமிர்தாச னத்தர்தொழும்

அருணாச லத்தர் வரையீர்!

முலையானை கட்டிஇடை வெளிதேர்நி றுத்திமதி

முகமாய்அ மைத்த ருகுலாம்

இலைவேல்ப ரப்பிஇனி தெழுதோள மைப்பனினி எழுதேன்இ ருப்பு மனமே

(பொ-ரை.) கயிலைமலையை இருப்பாக உடையவரும், மலைமகளின் மகிழ்நகை விரும்புபவரும், மெல்லென எழும் தென்றற் காற்றொடு வருபவரும், பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலும், அமுதத்தை உண்ணும் தேவர்களும் வழிபடுபவரும் ஆகிய அண்ணாமலையாரின் மலையில் உள்ளீர், கொங்கை களாகிய யானைகளைக் கட்டி, இடையாகிய வெளியில் அல்குலாகிய தேரை நிறுத்தி, மதியாகிய முகத்தை அமைத்து, அருகே உலாவுவதாகிய இலைவடிவில் அமைந்த வேல்களைப் பரப்பி, இனிதாய் எழும் தோளை அமைப்பேன்; இனி இரும்பு போன்ற மனத்தை எழுதேன்.

-

(வி-ரை.) வரையீர் என்றது வரையிடத்துள்ள மகளிரை. தலைவியின் உறுப்பு எழுதும் அருமை கூறினாராக, அதனைத் தான் எளிதில் எழுதவல்லனாதல் தலைவன் உரைத்தான். மலைமயில் உமை; ஆசம் நத்தர் -நகைப்பை நத்துபவர்; மலை யானிலம் - தென்றல் காற்று; தென்றல் - இளவேனில் காலத்திற்கு உரியது. அக்காலத்தில் அண்ணாமலையார் அழகுற உலாக் கொள்வார்; ஆதலால் மலையானிலத்து வருவார் என்றார். இதனை 'வயந்த விழா அழகர்' என்று முன்னே (14) குறித்தார். சந்தராயர் வசந்தவிநோதன் என்றும் கூறுவார். அமிர்தா சனத்தர் -அமிர்தம் அசனத்தர்; அசனத்தர் உண்பவர். இலை வேல் இலைவடிவில் செய்யப்பெற்ற வேல். உறுப்பெல்லாம்

-