பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

தாரத்தைப் பொன்னாக அமைத்தோம் தம்பீ தாம்பரமும் பொன்னாகச் சமைத்தோம்; இந்தப் பாரத்தை யாரவிவார் அயனா கத்தைப்

பசும்பொனிற மாகவுமே பாலித் தோமே.

107

சித்துக்கும் இயல்புக்கும் இரட்டுறலாக அமைந்தது ச் செய்யுள்.

(பொ-ரை.) வீரம் விளங்கும் மழுப்படை உடையவரும் உமை ஒரு பாகருமாகிய சிவபெருமானார் விளங்கும் ருவருணைப்பதியில் உள்ள சித்தராகிய யாம் கூறுவதைக்

கேட்பாயாக;

சித்து :

ஆ! படிக்காரத்தை எமக்குத் தா; வெண்கலத்தையே வியப்பான பொன்னாக்கிக் காட்டுவோம்; திருமாலுக்குத் தராவைப் பொன்னாகச் செய்தோம். தம்பீ! தாம்பரத்தையும் பொன்னாகச் செய்தோம்; இருப்பையும் நாகத்தையும் பசும்பொன் நிறமாகச் செய்தோம்; இத்தகைய பெருஞ்செயலை எவரே அறிவார்?

இயல்பு :

ஆகாரத்தை எமக்கு இடு; கஞ்சம் எனப்பெறும் தாமரையைக் கோகனம் எனச் செய்வோம். திருமாலுக்கு மனைவியைப் பொன்மகள் ஆக்கினோம்; அத் திருமாலின் பீதாம்பரத்தையும் பொன்னாடை ஆக்கினோம்; நான்முகன் உடலைப் பசும் பொன்னிறமாகப் படைத்தோம்; இப் பெருஞ்செயலை எவரே அறிவார்?

(வி-ரை.) கோகனம்

-

தாமரை ; பொன்மகள் - திருமகள்; பீதாம்பரம் - பொன்னாடை. பெயர் வேறாயினும் பொருள் மாறாமை அறிக. கஞ்சம் - வெண்கலம், தாமரை; ஆகாரத்தை என்பது ஆகாரம் என நின்றும் ஆ, காரம் எனப் பிரித்தும் பொருள் தந்தது. 'தம்பீ தாம்பரம்' என்பது தம்பீ தாம்பரம் என நின்றும் தம் பீதாம்பரம் எனப் பிரிந்தும் பொருள் தந்தது. அயனாகம்' என்பது அயன் (இரும்பு) நாகம் (துத்தநாகம்) என்றும் அயன் ஆகம் (நான்முகன் உடல்) என்றும் பிரிந்து பொருள் தந்தது.

(39)