பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

109

என்னும் பெயருடையாதாகச் செய்வோம்; இரும்பையும் கரும் பொன் என்னும் பெயரால் உரைத்துப் பொருந்தச் செய்வோம்.

(வி-ரை.) இன்பச்சிலை என்பதை இன் பச்சிலை எனப் பிரித்து இனிய பச்சிலை எனப் பொருள் கொள்ளினும் ஆம். மாதங்கம் என்பது யானையையும், அரவு பாம்பையும், கரும்பொன் இரும்பைக் குறிக்கும் வேறு பெயர்கள். அப் பெயர்களைக் குறிக்கு முகத்தான் சித்து விளையாடினார். சோறு என்பதும் கூழ் என்பதும் உணவேயாம். அப்பா என விளிப்பது சித்தர்நெறி. முன் பாடலிலும் இவ்வாறு வந்தமை அறிக. 'ஒளித் தரவா' என்பதை 'ஒளி தரவு ஆ' எனவும் 'ஒளித்து அரவு ஆ' எனவும் பிரித்து இருபொருள் காண்க. தரா-ஓர் உலோகம். முன்னும் 'தாரத்தைப் பொன்னாக அமைத்தோம்' என்றார்.(40)

41. வசந்தன் படை எழுந்தது தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தது

எழுசீர் ஆசிரியவிருத்தம்

இதழி யந்தொடையர் அருணை யங்கிரியில்

இரத முந்திவிடு வலவனே!

பதிய டைந்தமறு கினில்வ சந்தனதி

படையெ ழுந்ததது பகருவேன்

புதிய கொம்புசிலை வளையி ரண்டருகு

பொழியும் வெம்பகழி போரறா

உதய தந்தமத களிறு டன்கதலி

உபய தண்டுவரு கின்றதே.

(பொ-ரை.) அழகிய கொன்றை மாலை அணிந்த அண்ணாமலையாரது எழில் வாய்ந்த மலையின்கண் தேரை விரைந்து செலுத்துகின்ற வலவனே, ஊரைச் சேர்ந்தவீதியில் மன்மதன் படை எழுந்ததைச் சொல்வேன். கேட்பாயாக; புதுமையான ஊதுகொம்பும், வில்லும், சங்கும் இருபக்கத்தும் சொரிகின்ற கொடிய அம்புகளும், போர்த் தொழில் நீங்காத ஒளிவாய்ந்த தந்தத்தையுடைய யானையொடு, இருகதலித் தண்டுகளும் வருகின்றது.

(வி-ரை.) தலைமகளின் உருவெளித் தோற்றம் கண்ட தலைவன் தன் தேர்ப்பாகனுக்கு அவள் உறுப்புகளை உரைத்தது